அவிசுவாசமாகிய பாவம் 9 அவிசுவாசமாகிய பாவம் The Sin Of Unbelief 58-05-17E பாங்கோர், மைனே அமெரிக்கா நீங்கள் விரும்பினால் ஜெபத்திற்காக சிறிது நேரம் நாம் நின்றவண்ணமாய் இருக்கலாம். அன்பான தேவனே, உம்முடைய குமாரனின் வார்த்தையை மறுபடியுமாக நித்தியத்தின் இந்த பக்கத்திலிருந்து பிரசங்கிப்பதற்கான இந்த மற்றுமொரு சிலாக்கியத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தையின் மூலமாக நீர் எங்களுடன் கூட ஒரு விசேஷித்த விதத்தில் பேச வேண்டும் என்று இந்த இரவில் நாங்கள் கேட்கிறோம். [ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி) எங்களுடைய ஜீவியத்திலும் மற்றும் இன்றிரவு செய்தியிலும் பரிசுத்த ஆவியானவரின் மேம்பட்ட ஐக்கியத்தை நாங்கள் பெற்றிருப்போமாக. மேலும் இந்த - யாரெல்லாம் தேவையுள்ள வர்களாய் இருக்கிறார்களோ, அவர்களுக்கு உண்மையாக தேவைப்படுவது எதுவோ அதை கண்டடைவார்களாக. கர்த்தாவே, இன்றிரவும் நீர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்த வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். உமக்கே மகிமையை எடுத்துக்கொள்வீராக, இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். (அமரலாம்) 2. இந்த காலை வேளையில் முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் சிற்றுண்டியிலிருந்த அந்த அருமையான ஐக்கியத்தின் நேரத்திற்கு பின்னர், நாங்கள் சற்றே மகத்தான ஐக்கியத்தை கொண்டிருந்தோம்; அதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். இப்பொழுது இந்த இரவில், உங்களில் பலர் நின்றிருப்பதை நான் பார்க்கிறேன்... நாங்கள் வந்து கொண்டிருந்தபோது, உள்ளே இருக்க இடமில்லாததால் ஜனங்கள் வெளியே தெருவில் இருந்தார்கள். ஆகவே நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு துரிதப்படுத்த விரும்புகிறோம். நாளை மதியம் நான் – நான் மீண்டும் பேச வேண்டுமென்று எனக்காக வாசலில் காத்திருந்த என் மகன் என்னிடம் கூறுவதை கேட்டேன், இந்த இடத்தில் தான் என்று நான் நினைக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், சிறிது நேரத்திற்கு, "நான் ஏன் மறுபடியும் பிறந்தாக வேண்டும்,” என்கிற தலைப்பில் அப்பொழுது நான் பேசுவேன், ஒரு சிறிய சுவிசேஷ செய்தி, சுருக்கமாக, இருபது - முப்பது நிமிடங்களுக்கு மேல் இருக்காது: மூன்றரை மணிக்கு வெளியே போய்விடலாம் எனவே நீங்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் நாளை சாயங்காலத்திற்கு என்று ஓய்வெடுக்கலாம். நாளை சாயங்காலம் சுகமளித்தல் ஆராதனையை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்பொழுதிலிருந்து வரவிருக்கும் புதன் இரவு வரை. 3. இன்றிரவு நான் ஒரு சிறிய வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன், இந்த கூட்டத்திற்கான அமைப்பை சூழ்நிலையை கொண்டுவரும்படியாக, பரிசுத்த மத்தேயு 12-ல், 42-ஆம் வசனத்தில் காணப்படுகிறது, நாம் என்ன கூற விரும்புகிறோமோ அதின் பின்னணியை பெற்றுக் கொள்ள, ஒரு சிறு செய்தி. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோ டெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். இப்பொழுது, "அவிசுவாசமாகிய பாவம்” என்கிற தலைப்பில், கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு ஒரு செய்தியை நான் எடுக்க விரும்புகிறேன். உண்மையாகவே ஒரே ஒரு பாவம்தான் உண்டு, அதுதான் அவிசுவாசம். பல நேரங்களில் நாம் நினைக்கிறோம், பாவமென்றால் அது குடிப்பது, சூதாடுவது, விபச்சாரம் செய்வது என்று, ஆனால் அதெல்லாம் பாவமல்ல; அது அவிசுவாசத்தின் தன்மைகள் மட்டுமே. ஒரு மனிதனோ, பெண்ணோ அதை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தால், அப்பொழுது அவர்கள் அந்த காரியங்களை செய்ய மாட்டார்கள். ஆகவே பாவம் என்பது, நாம் எதை பாவம் என்று அழைக்கிறோமோ, அது அவிசுவாசத்தின் தன்மைகளே. இரண்டே இரண்டு ஆவிகள் மட்டும்தான் ஒரு மனிதனை கட்டுப்படுத்துகிறது: அது அவனுடைய விசுவாசமாக இருக்கலாம் அல்லது அவிசுவாசமாக இருக்கலாம். இன்றிரவு நம்மில் ஒவ்வொருவரும் அந்த ஆவிகளில் ஒன்றினாலோ அல்லது மற்றொன்றினாலோ பிடிக்கப்பட்டிருக்கிறோம். 4. மேலும் அவிசுவாசமானது மிக பயங்கரமான ஒன்றாகும். இயேசு இந்த இடத்தில் ஜனங்களுக்கு போதித்துக் கொண்டும் மேலும் அவர்களின் அவிசுவாசத்தின் நிமித்தம் அவர்களை கடிந்துக் கொண்டும் இருந்தார். முந்தைய அதிகாரத்தில் அவர் கூறியிருந்தார், “வானபரியந்தம் உயர்த்தப்பட்டிருக்கும் சீதோனே மற்றும் கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய், உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள், சோதோமிலும் கொமோராவிலும் மேலும் மற்ற நகரங்களிலும் செய்யப் பட்டிருந்தால்... கப்பர்நகூமிலே செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலும் கொமோராவிலும் செய்யப் பட்டிருந்தால், கூறினார், “அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.” ஆகவே ஏன் சோதோமும் கொமோராவும் நிலைத்து நிற்கவில்லை? அவர்களுக்கு ஒரு தூதன் இருந்தான்; விடுதலைக்கான ஒரு செய்தி அவர்களிடமிருந்தது. அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது, தேவனுடைய எச்சரிப்புகள் இருந்தன, அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள தவறிவிட்டார்கள். சோதோமும் கொமோராவும் இன்றைக்கு சவ கடலுக்கு அடியிலே கிடக்கின்றன, அதில் மிச்சம் மீதி என்று கூட எதுவும் இல்லை. அதுதான் அவிசுவாசத்தின் பலன். இயேசு கூறினார், “அந்த செய்தியை காட்டிலும் ஒரு மகத்தான செய்தி இப்பொழுது இங்கே இருக்கிறது.” இருந்த போதிலும் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. 5. அப்பொழுது அவரை அழைத்தார்கள், அவர் பெயெல்செபூல் என்று அழைக்கப்பட்டார். பெயெல்செபூல் என்பது பிசாசுகளின் தலைவனாக கருதப்பட்டது. ஜனங்களின் எண்ணங்களை அவரால் பகுத்தறிய முடிந்த காரணத்தால், அவர்கள் எங்கே இருந்தார்கள் என்றும், அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கூறியதால், அவர் ஒரு பொல்லாத ஆவி அவருக்குள் இருந்து அதை செய்கிறது என்று அவர்கள் கூறினார்கள். வருட கணக்காக வேத வாக்கியங்களை வாசித்து. மகத்தான ஆவிக்குரிய பயிற்சிகளை (schools of spirits) பெற்ற புருஷர்களும் ஸ்திரீகளும், வேதாகமம் அது அவ்வாறுதான் இருக்கும் என்று எளிமையாக கூறியிருக்கும்போது, அது போன்ற ஒன்றை பார்த்து, அதை பிசாசின் கிரியை என்று தீர்க்கும் அளவுக்கு ஒரு நிலையிலிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவர்கள் அவரை அடையாளங்காண தவறும் அளவிற்கு அவர்கள் தங்களுடைய சுய மத கொள்கைகளிலும், தங்களுடைய சுயமான தேவனை பற்றின படிப்பிலும் (theology) மிகவும் ஊறிப் போயிருந்தார்கள். 6. தேவன் எல்லா காலங்களினூடாகவும் மனிதர்களை கொண்டே கிரியை செய்து வந்தார். அவர்கள் அவரை விசுவாசிக்காமல் போனதற்கான காரணம் என்னவென்றால், அவர் ஒரு மனிதனாயிருந்து கொண்டு தேவனுடைய இந்த மகத்தான கிரியைகளை செய்ததுதான். ஆனால் தன்னுடைய பிரதிநிதிகளின் மூலமாக தன்னை பிரத்தியட்சமாக்குவது தேவனுக்கு பிரியமானது, ஏனெனில் தேவன் ஆவியாயிருக்கிறார். தேவன் தன்னை தன்னுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் மூலம் பிரத்தியட்ச மாக்கினார். அவர்கள் அவர் தன்னைத்தானே தேவனாக்கிக் கொண்டார் என்று கூற முயற்சித்தார்கள். இவைகளை செய்யும் ஒரு மனிதன் கல்லெறியப்பட அல்லது கொலை செய்யப்பட பாத்திரனா யிருக்கிறான் என்று அவர்கள் கூறினார்கள் (மரண தண்டனைக்கு, கல்லெறிவது என்பது மரண தண்டனையாய் இருந்தது) மேலும் ஒரு மனிதனாயிருந்து அவரால் எப்படி அது போன்றதை செய்யமுடியும் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. உலகமானது அதிகமாக மாறிவிடவில்லை. தேவன் ஆவியாயிருந்து மனிதர்களின் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை பார்க்க இன்னமும் கூட ஜனங்களுக்கு கடினமாய் இருக்கிறது. எல்லா காலங்களிலும், தேவன் மனிதனின் மூலமாக கிரியை செய்து வந்தார். அவர் தன்னைத்தானே மோசேயின் மூலமாக, எலியாவின் மூலமாக, மேலும் நோவாவின் மூலமாக, ஏனோக்கின் மூலமாக வெளிப்பட்டார். எல்லா காலங்களினூடாகவும் தேவன் தன்னை தன்னுடைய நிறுவனத்தின் (agency) மூலமாக; மனிதனின் மூலமாக வெளிப்படுத்தினார். இந்த புறஜாதி காலத்தில் தன்னுடைய ஆளுகைக்கு கீழ் உள்ளவர்கள் (subjects) மூலமாக; சபையின் மூலமாக தன்னைத்தானே பிரத்தியட்சமாக்குவதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். ஆனால் அதை குறித்ததான இன்றைக்கான பிரச்சனை என்னவென்றால், "அவர் குறிப்பிடும் அந்த சபை எதுவென்றால் அது என்னுடைய ஸ்தாபனம்தான்” என்று ஒவ்வொருவரும் கூற விரும்புவதே. மற்றவனுக்கு அதை நீங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் தேவன் ஸ்தாபனங்களின் மூலமாக கிரியை செய்வதில்லை; அவர் தனிப்பட்ட நபர்களின் (individuals) மூலமாகவே கிரியை செய்கிறார். 7. இங்கே முந்தைய வசனத்தில் அவர் ஜனங்களிடம் அவர்களுடைய அவிசுவாசமாகிய பாவத்தை குறித்து சொல்லிக்கொண்டும் கடிந்துகொண்டும் இருந்ததை நாம் காண்கிறோம், அவர் கூறினார் அதாவது யோனாவை பற்றியும், மேலும் எப்படியாய் அந்த யோனா ஒரு லட்சத்து எண்பதாயிரம் (Hundred and Eighty thousand) ஜனங்கள் வசிக்கும் ஒரு பட்டணத்திற்கு சென்றான் என்பதை பற்றியும் பேசினார். அந்த ஜனங்களுக்கான செய்தியோடு தேவன் அவனை அங்கே அனுப்பினார். அவன் எப்படியாய் தர்ஷீசுக்கு போகும் கப்பலில் ஏறினான் என்கிற கதை நம்மில் அநேகருக்கு நன்கு தெரிந்ததே. அவன் போகும் பாதையில் புயல் வந்தது. ஒ, யோனா முழுவதுமாக தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்தான் என்று பல நேரங்களில் நாம் கூற விரும்புகிறோம். அந்தக் கட்டளையின் படி பார்த்தால் அவன் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் தன்னை நேசிக்கிறவர்களுக்கு தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார். அந்த கீழ்ப்படியாத தீர்க்கதரிசியின் யாத்திரையை நாம் வாசிக்கும் படியான மகத்தான ஆசீர்வாதங்களில் ஒன்றாக அவர் மாற்றினார். அந்த கப்பல் மூழ்க போகும் வேளையிலே, அவர்கள் அவனுடைய கைகளையும் கால்களையும் கட்டி கப்பலில் இருந்து அவனை வெளியே தூக்கிப் போட்டார்கள். ஒரு பெரிய மீன் தண்ணீரினூடாக வந்து அவனை விழுங்கியது. ஒரு மீன் சாப்பிட்ட பிறகு, அது தண்ணீருக்கு அடியில் சென்று அதினுடைய துடுப்புகளை (swimmers) அடியிலே இளைப்பாற பண்ணும் என்பதை யாவரும் அறிவோம். உங்களுடைய தங்க மீன்களுக்கு உணவு போட்டு; அவை எப்படியாய் கீழே அடிபாகத்திற்கு செல்லும் என்பதை கவனித்துப்பாருங்கள். அவை தண்ணீரில் இரை தேடி அலைந்து தாங்கள் உண்ணுவதற்காக தேடியது சிக்கிய பிறகு, அப்பொழுது அவை கீழே சென்று, அடிப்பகுதியிலே தங்களுடைய துடுப்புகளை இளைப்பாறப் பண்ணும். எல்லா மீன்களும் அதை செய்யும். 8. தேவன் ஆயத்தப்படுத்திய இந்த மிக பெரிய மீன், அது ஒரு திமிங்கலம்(whale) என்று நாம் விசுவாசிக்கிறோம், அது யோனாவை விழுங்கிய பிறகு, இளைப்பாறும்படி அது அடிப்பாகத்திற்கு சென்றது, ஏனெனில் அங்கே ஒரு பெரிய புயல் அந்த தண்ணீரை தத்தளிக்க செய்திருக்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நீந்துவது மிக மிக கடினமாக இருந்திருக்கும். ஆனால் அது தன்னுடைய வயிற்றை முழுவதுமாக நிரப்பிக்கொண்டது, எனவே அது நான் கீழே சென்று ஓய்வெடுப்பேன் என்று நினைத்தது. நான் அடிக்கடி சிந்திப்பது வழக்கம் ஜனங்கள் இவ்வாறாக கூறும்போது, "நல்லது, நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், ஆனால், என்னால் அவ்வாறு உங்களுக்கு தெரியுமா, என்னால் ஜீவிக்க முடியவில்லை" அல்லது ஒருவன் இப்படி கூறுவதை, “நான் கிறிஸ்துவை எனக்கு சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டேன், மேலும் நான்... ஓ, எனக்கு தெரியவில்லை, என்னால் - என்னுடைய கைகள் நன்றாவதை என்னால் பார்க்க முடியவில்லை. என்னுடைய வயிற்றில் இருக்கும் வயிற்றுப்புண்ணில் எந்த முன்னேற்றமும் இல்லை. என்னுடைய தலைவலி நிற்கவே இல்லை." அப்படியானால் நீங்கள் கிறிஸ்துவை மனம் சார்ந்த கருத்தோடு (mental conception) மாத்திரமே ஏற்றுக் கொண்டு ருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவை இருதயத்தில் பிடித்துக் கொண்டால், அப்பொழுதிலிருந்து எந்தவொரு அறிகுறிகளும் உங்களை தொல்லைப் படுத்தாது. எது நடந்தாலும் நீங்கள் இன்னமுமாக தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று கூறுவீர்கள். 9. ஓ, வனாந்தரத்தின் பின்புறத்தில் மோசே சந்தித்தது போல, மனிதன் தேவனை சந்திக்க கூடியதான அந்த சிறிய பரிசுத்தமான ஸ்தலம். நாற்பது வருடம் அருமையான பள்ளிப்படிப்புக்கு பிறகு, இருப்பதிலேயே கொடுக்க முடிந்ததிலேயே மிக பெரிய பட்டத்தை பெற்றவனாய், தன்னுடைய ஸ்தானத்தை ஒரு இரட்சகன் என்றும் எபிரேயன் என்றும் அறிந்தவனாய், தேவன் தன்னை அந்த கட்டளைக்கு (commission) அழைத்தார் என்பதை அறிந்தவனாய் இருந்தான், இருந்தபோதிலும் அவனுடைய நாற்பது வருட தேவனை பற்றின படிப்பு (theology) அவனுக்கு போதித்ததை காட்டிலும் அந்த எரிகிற முட்செடியின் பிரசன்னத்தில் ஐந்து நிமிடத்தில் அவன் தேவனை பற்றி மிக அதிகமாக அறிந்துகொண்டான். அவன் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தான். சுவிசேஷத்தை பிரசங்கிக்க களத்திற்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்த வனாந்தரத்தின் பின்புற அனுபவம் (back-of-the-desert experience) அவனுக்கு கிடைக்கும் வரை ஒருபோதும் செல்லவே கூடாது. அதை உன்னுடைய சிந்தையிலிருந்து எடுத்துப் போடும்படி எவனாலும் விளக்கம் கொடுக்க முடியாது. அவர்கள் வேத வாக்கியத்தை எவ்வளவாக திரித்து இதையும், அதையும் அல்லது மற்றதையும் கூறினாலும், நீ மட்டும் தேவனை உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தில் முகமுகமாய் எப்பொழுதாவது சந்தித்திருந்தால், அதை உன்னுடைய சிந்தையிலிருந்து அழித்துபோடும் அளவுக்கு போதுமான தேவபாடம் படித்தவர்கள் (theologians) இந்த உலகத்தில் இல்லை. ஏதோவொன்று நடந்தது; நீ அங்கே இருந்தாய். ஒரு மனிதன் அந்த ஸ்தலத்திற்கு வரும்போது, ஒருவனாலும் அதை அவனை விட்டு எடுத்துப்போடும் படி விளக்கம் கூற முடியாது. ஒரு நபர் கிறிஸ்துவுக்குள்ளாக அந்த ஸ்தலத்தை கண்ட றியும்போது, அந்த விசுவாசம் “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்” என்று கூறும், அங்கே - நீ மரிக்க போகிறாய் என்று உன்னிடம் சொல்லும் அளவுக்கு போதுமான மருத்துவர்கள் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள். உன்னுடைய அறிகுறிகள் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, எப்படியாயினும் நீ அதை இன்னமுமாக விசுவாசித்துக்கொண்டே இருப்பாய். 10. ஆபிரகாமை போல, அவன் இல்லாதவைகளை இருப்பவைகள் போன்று அழைத்தான், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவார் என்பதை விசுவாசித்து, அவன் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டான். இன்றைக்கு அதை குறித்ததான சபையில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், விசுவாசத்தோடு (faith) வருவதற்கு பதிலாக நம்பிக்கையோடு (hope) வருகிறோம். விசுவாசம் நேர்மறையானது (positive). விசுவாசத்திற்கு ஊக்கப்படுத்தும்படி (booster) எதுவுமே தேவையில்லை; தான் எதைப்பற்றி பேசுகிறோம் என்பதை விசுவாசம் அறிந்திருக்கும். விசுவாசம் பெலமுள் ளது. விசுவாசம் நெஞ்சில் மயிர் கொண்டது; அது பேசும் மற்றதெல்லாம் வாயை மூடிக்கொள்ளும். உண்மையான தெய்வீக விசுவாசம் பேசும்போது அறிகுறிகளெல்லாம் பேச கூட முடியாது. அது முழு கவனத்தையும் ஈர்த்து விடும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை அது அறிந்திருக்கும். அது ஒரு அனுபவத்தை பெற்றிருந்தது. ஜனங்கள் தங்களுடைய அறிகுறிகளை (Sympotmps) பற்றி கூறுவதை நான் கேட்கும்போது, நான் யோனாவை பற்றி சிந்திப்பேன். அறிகுறிகளை பற்றி குறை கூறுவதற்கென உரிமை கொண்ட மனிதன் யாரேனும் இருப்பான் என்றால், அது யோனாவாகத்தான் இருக்க முடியும். அவன் செய்யும் படி தேவன் கூறியதை அவன் செய்யாமல் தவறவிட்ட போது அவன் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்தான் என்பதினால் அவனை பின்வாங்கிப்போனவன் என்று நாம் நினைப்போம். அப்பொழுது அவன்– அவனுடைய கைகள் அவனுக்கு பின்னாக கட்டப்பட்டு இருந்தது; அந்த சமுத்திரத்தின் மேல் ஒரு பெரிய சூறாவளியோடு (tornado), அந்த சீற்றம் நிறைந்த சமுத்திரத்திற் குள்ளாக அவன் ஒரு மீனின் வயிற்றில் இருந்தான், அவன் கழுத்தில் கடற்பாசியினால் சுற்றப்பட்டவனாய் மேலும் வாந்தியோடும் அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்தான். அவன் இந்த பக்கமாக பார்த்தால் அது திமிங்கலத்தின் வயிறு. அவன் பார்த்த ஒவ்வொரு பக்கமும் திமிங்கலத்தின் வயிறாகவே இருந்தது. நீங்கள் பேசும் அறிகுறிகளெல்லாம் அவனுக்கு இருந்தது. நிலைமையில் இன்றிரவு யாருமே இங்கு இல்லை. 11. ஆனால் அந்த மனிதன் என்ன செய்தான் என்று பாருங்கள். அவன் பின்வாங்கி போனவன் என்றும் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்தான் என்றும் மேலும் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும் நாம் நினைக்கிறோம். அதுபோன்ற அமைப்பிலும் அவன் கூறினான், "அவையெல்லாம் பொய்யின் மாயை. நான் அவைகளை பார்க்க கூட மாட்டேன். ஆனால் இன்னும் ஒரு விசை நான் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி பார்க்கிறேன்” என்றான். ஏனெனில் சாலொமோன் அந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது இந்த ஜெபத்தை ஏறெடுத்தான் என்பது அவனுக்கு தெரியும் "உம்முடைய ஜனங்கள் எங்கேயாவது தொல்லையில் இருந்து இந்த பரிசுத்த ஆலயத்தை நோக்கி பார்த்தால், அப்பொழுது அவர்க ளுடைய விண்ணப்பத்தை கேட்டு, கர்த்தாவே, அவர்களை இரட்சியும்... .அவன் சாலொமோனுடைய ஜெபத்தையும் மனிதனால் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையும் விசுவாசித்தான். அந்த அறிகுறிகளுடன் மேலும் அந்த சூழ்நிலையிலும் அவனால் சாலொமோனின் ஜெபத்தையும் மனிதர்களால் செய்யப்பட்ட ஒரு ஆலயத்தையும் விசுவாசிக்க முடிந்தால், இந்த சூழ்நிலைகளில் இருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும், கைகளால் செய்யப்பட்ட ஒரு ஆலயத்தையோ அல்லது பூமியை சார்ந்த ஒரு மனிதனின் ஜெபத்தையோ பார்க்க தேவையில்லை, ஆனால் தேவனுடைய சிங்காசனத்தை பார்க்க வேண்டும் அங்கே நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படி இயேசு தன்னுடைய சொந்த இரத்தத்துடன் அவருடைய வலது பாரிசத்தில் நின்றிருக்கிறார், அவர் அந்த நோக்கத்திற்காக மரித்திருக்கும் போது. நம்முடைய அறிகுறிகளை நாம் கவனிக்க கூடாது மேலும் இருக்கின்ற அந்த காரியங்களை இல்லாதவைகளாக அழைக்க வேண்டும். தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். 12. அந்த சூழ்நிலைகளில் இருந்த அந்த தீர்க்கதரிசிக்கு தேவன் என்ன செய்தார் என்று பாருங்கள். மூன்று நாட்கள் அவனை உயிரோடு வைத்திருந்தார். இப்பொழுது, நினிவே ஜனங்கள் விக்கிரகங்களை தொழுது கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களுடைய கடலின் தேவன் (god of sea) திமிங்கலமாக இருந்தது. எல்லா மீனவர்களும் கரையில் இருந்தார்கள், இதோ அந்த திமிங்கலம் சரியாக கரைக்கு நீந்தி வந்து, அந்த கரையிலே அந்த தீர்க்கதரிசியை துப்பியது: அந்த தேவன் (god) அந்த தீர்க்கதரிசியை பார்வைக்கு கொண்டு வந்து வைத்தது. நிச்சயமாக அவர்கள் அதற்கு செவி கொடுப்பார்கள். அவன் நகரத்தினூடாக பிரசங்கித்துக் கொண்டே சென்ற போது, வலது கை எது இடது கை எது என்று அறியாத ஜனங்கள் தங்களுடைய மிருக ஜீவன்களுக்கும் இரட்டை உடுத்தி சாம்பலை போடும் அளவுக்கு அவர்கள் மனந்திரும்பினார்கள். இயேசு அதை பற்றி குறிப்பிட்டார், அதாவது யோனாவின் பிரசங்கத்தினால் நினிவே ஜனங்கள் மனந்திரும்பினார்கள், மேலும் "யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்று அவர் கூறினார். அவர்களோ அவரை பெயெல் செபூல் என்று அழைத்தார்கள். 13. அடுத்து அவர் தென்தேசத்து இராஜஸ்திரீயை பற்றி குறிப்பிட்டார், அவள் ஷீபாவின் ராணி என்பதை நாம் அறிவோம். இப்பொழுது, பாலஸ்தீனாவிலிருந்து ஷீபாவிற்கு எவ்வளவு தூரம் என்று உங்களுடைய உலக வரைப்படத்தில் (map) நீங்கள் அளந்தால்... இப்பொழுது, சாலொமோனுடைய நாட்களில் தேவன் கிரியை செய்து கொண்டிருந்தார். திரும்பவும், ஒரு சாட்சி இல்லாமல் அவர் தன்னுடைய ஜனங்களை ஒருபோதும் விட்டதே கிடையாது. எல்லா காலங்களிலும் தேவன் தன்னுடைய வரத்தை தன்னுடைய ஜனங்களில் வைத்திருந்தார். அதை மீண்டும் கூறுகிறேன். எல்லா காலங்களிலும் தேவன் தன்னுடைய பிரதிநிதியை பூமியில் கொண்டிருந்தார்: ஒரு சாட்சி இல்லாமல் ஒருபோதுமே இருந்ததில்லை மேலும் சாலொமோனின் நாட்களில் தேவன் சாலொமோனுக்கு ஒரு வரத்தை அளித்திருந்தார். அதுபோன்ற ஒரு வரத்தை தேவன் அனுப்பும்போது, ஜனங்கள் அதை மறுத்துவிட்டால், அது அந்த ஜனங்களுக்கு பெருங்குழப்பமாகிவிடும். ஆனால் ஜனங்கள் அதுபோன்ற ஒரு வரத்தை ஏற்றுக்கொண்டால், அப்பொழுது அது அந்த ஜனங்களுக்கு பொற்காலமாயிருக்கும் (golden age). அது அவர்களுடைய பொற்காலம் என்று தெரியப்படுத்த அவர் முயற்சி செய்தார், ஆனால் அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர், "நான் வந்து உங்களுக்கு முன்பாக தேவனுடைய கிரியைகளை செய்தேன், நீங்களோ என்னை விசுவாசிக்கவில்லை” என்றார். அவர், “யோனாவின் நாட்களில் என்ன நடந்தது என்று கவனியுங்கள், சாலொமோனின் நாட்களில் என்ன நடந்தது என்று கவனியுங்கள்” என்றார். இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு நாம் அதை எடுத்து, சாலொமோனின் நாட்களைப் பற்றி பார்ப்போம். 14. பகுத்தறிகின்ற ஒரு மகத்தான வரத்தை தேவன் சாலொமோனுக்கு அளித்தபோது, முழு இஸ்ரவேலும் அதை சுற்றி திரண்டனர்... ஓ, தேவனுடைய மகத்தான வரத்தை, அந்த பரிசுத்த ஆவியை சுற்றி எல்லா சபைகளும் திரண்டு வந்தால் இந்த நாள் ஒரு மகத்தான நாளாக இருக்கும் அல்லவா? நம்முடைய எல்லா வேறுபாடுகளையும் ஸ்தாபனங்களையும் நாம் மறந்துவிட்டு தேவன் இதுவரை பூமிக்கு அனுப்பியதிலேயே மகத்தான அந்த வரத்தை, பரிசுத்த ஆவியை சுற்றி திரண்டு வந்தால் அது அற்புதமாயிருக்கும் அல்லவா? அவர் வர வேண்டும் என்பதற்காகதான் அவருடைய குமாரன் மரித்தார். கிறிஸ்துவை காட்டிலும் பரிசுத்த ஆவி மகத்தான வரமா? என்று நீங்கள் கேட்கலாம். கிறிஸ்துவின் மூலமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் வந்தார். அவர்கள் அவரை பெயெல்செபூல் என்று அழைத்த போது, அவர் கூறினார், “நீங்கள் அதை மனுஷகுமாரனாகிய எனக்கு விரோதமாக கூறுகிறீர்கள், நான் உங்களை மன்னிக்கிறேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தை செய்யும்போது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை இருந்தாலும் அது இந்த உலகத்திலும் அல்லது வரப்போகிற உலகத்திலும் ஒருபோதும் மன்னிக்கப் படாது. ”அந்த நாள் இருந்ததைக் காட்டிலும் இது ஒரு மகத்தான நாளாயிருக்கிறது: உலகளவில் பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய சபையில் கிரியை செய்கிறார். அது அற்புதமாயிருக்கும் அல்லவா? அது சாலொமோனுடைய நாட்களில் இருந்தது போன்று இருக்கும். சாலொமோனுடைய நாட்களில் அது அது இஸ்ரவேலின் பொற்கால ஆயிரவருட அரசாட்சியாக (golden millennium) இருந்தது என்று எல்லாருக்குமே தெரியும். அவர்கள் அந்த ஆலயத்தை கட்டினார்கள். எல்லா தேசங்களும் அவர்களுக்கு பயந்தார்கள். 15. இன்றைக்கு நாம் மிகவும் பயத்துடன் இருக்கும்போது, ஸ்புட்னிக்குகள் [செயற்கை கோளின் பெயர் ஆசி] வானங்களில் இருக்கிறது... ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட அதனை ரஷ்யா அங்கே இப்பொழுது வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறதை நான் பார்க்கிறேன். இந்த நாட்களில் ஒன்றில் அவர்கள் விழிக்கப் போகிறார்கள். நாம் ஒவ்வொரு இடங்களிலும் பாதுகாப்பு அறைகளை (shelters rest) கட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த பாதுகாப்பு அறைகள் உங்களுக்கு என்ன நன்மை செய்யபோகிறது, ஒரு ஹைட்ரஜன் அணுகுண்டு... நான் பேசிக்கொண்டிருந்தேன், சமீபத்தில் யாரோ ஒரு விஞ்ஞானியுடன் பேச சிலாக்கியம் கிடைத்தது, அவர் கூறினார், "சகோதரன் பிரன்ஹாமே, அந்த அணுகுண்டு வெடித்து தரையிலே நூற்று எழுபத்தி ஐந்து அடி ஆழத்துக்கும் நூறு மைல்கள் சதுரத்திற்கும் குழியை உண்டுபண்ணும்.” நீங்கள் தரையிலிருந்து ஐநூறு அடிக்கு கீழே இருந்தால் என்ன? ஏன், அந்த அழுத்தத்தின் அதிர்வு (concussion) உங்களுடைய சரீரத்தில் இருக்கும் ஒவ்வொரு செல்களையும் உடைத்துவிடும். நீங்கள் நூற்றுகணக்கான மைல்கள் தூரத்தில் இருந்தால் என்ன? அப்பொழுதும் அது அதே காரியத்தை தான் செய்யும். தேவன் அதை செய்திருக்கிறார். இங்கே ஒளிந்துக்கொள்ள வேறு இடமே இல்லை ஒரு இடத்தை தவிர; நமக்கும் ஒரு அணுகுண்டு பாதுகாப்பு அறை (bomb shelter) இருக்கிறது. அது எஃகினால் (steel) செய்யப்பட்டதோ அல்லது பூமிக்கு அடியில் செய்யப்பட்டதோ அல்ல; அது இறகுகளினால் செய்ய பட்டதாயிருக்கிறது. அவருடைய செட்டைகளுக்கு கீழாக நாம் நிலைத்திருந்து, இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே சேதமில்லாமலும் பாதுகாப்பாகவும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விடுவோம். 16. இஸ்ரவேல் தங்களுடைய தேவனை சுற்றி திரண்டிருந்த வரை அவர்கள் சேதமில்லாமல் இருந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இது ஒவ்வொரு இடங்களிலும் ஒரு பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியிருந்திருக்கும். இஸ்ர வேல் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் இருப்பதை கடந்து செல்லும் ஜனங்கள் காண்பார்கள். மேலும் அது தேசத்தில் இருந்து தேசத்திற்கு பரவி சென்றது. இன்றைக்கு எல்லா சபைகளும் ஒன்றிணைந்து கிறிஸ்தவர்கள் தங்களுடைய இருதயங்களை ஒருமனமாக்கினால், நம்முடைய மகத்தான, அழகான, இனிமையான அமெரிக்கா தேசத்திலும் அது அப்படியேதான் இருக்கும், “என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் தங்களை ஒன்று சேர்ந்து ஜெபிப்பார்கள், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு.” அமெரிக்காவில் இருக்க கூடிய ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் என்று ரஷ்யாவிற்கு தெரியவரும்போது அது அவர்களுக்கு இதுவரை இருந்ததிலேயே மிக பெரிய அச்சுறுத்தலாய் இருக்கும் அல்லவா? நிச்சயமாக அது இருக்கும். ஒருவனும் தேவனுக்கு விரோதமாக சண்டையிட முடியாது. இஸ்ரவேல் அவ்வாறுதான் ஒன்றிணைந்து இருந்தார்கள். அவர்களுக்கு யுத்தங்கள் என்று எதுவுமே இல்லை; ஒவ்வொருவரும் அவர்களுக்கு பயந்திருந்தார்கள், இஸ்ரவேலை பார்த்து பயப்படவில்லை, ஆனால் அவர்களுடைய தேவனை பார்த்து பயந்தார்கள். 17. உலகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து இந்த வழிப் போக்கர்கள், ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் சென்றார்கள், இந்த செய்தி சரியாக ஷீபாவிற்கு சென்றது. அங்கிருந்து வரும் ஒவ்வொருவரும் இந்த சிறிய ராணியிடம் கூறுவார்கள், "ஓ, நீ இஸ்ரவேலில் இருந்திருக்க வேண்டும்; தேவன் அவர்களுக்கு ஒரு மகத்தான வரத்தை அனுப்பியிருக்கிறார், அது கிரியை செய்கிறது. அது பிரத் தியட்சமாவதை நான் கண்டபோது நான் உடனிருந்தேன்.” என்னே ஒரு சிலிர்ப்பாய் அது இருந்திருக்கும். மேலும் நீங்கள் அறிவீர்கள், விசுவாசம் கேள்வியினால் வரும், தேவ னுடைய வார்த்தையை கேட்பதால் வரும். அங்கே ஒரு தேவன் இருக்கிறார் அவர் ஒரு மனிதனை ஒரு மகத்தான வரத்தோடு அபிஷேகித்திருக்கிறார் என்று வெவ்வேறு நபர்கள் கூறுவதை இந்த சிறிய ராணி கேட்டுக்கொண்டே இருந்தபோது, அவளுடைய இருதயம் ஏங்கி தவிக்க ஆரம்பித்தது. வேதவாக்கியம் கூறுகிறது நீங்கள் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று. ஜனங்கள் கிறிஸ்துவுக்காக தாகமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உப்பாக மட்டும் இருங்கள். சபை செய்ய வேண்டியது அவ்வளவுதான். உப்பு தாகத்தை உண்டு பண்ணும். ஆனால் உப்பு தன்னுடைய சாரத்தை இழந்தால், சபை தன்னுடைய சாரத்தை இழந்தால் வெறும் ஸ்தாபனங்களாகிவிடும். அதன்பிறகு அது பேசப்படு வதற்கும், மனிதர்களின் கால்களுக்கு கீழே கொட்டப்படு வதற்குமே தவிர வேறொன்றுக்கும் உதவாது. என்னே ஒரு நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், ஜனங்களுக்கு என்னே ஒரு கடிந்துகொள்ளுதல்? ஆனால் செழிப்புதான் (prosperity) அதை செய்தது. 18. இப்பொழுது, கவனியுங்கள். அங்கு சென்று அதை பற்றி பார்க்க வேண்டும் என்கிற ஏக்கத்தை அந்த சிறிய ராணிக்கு அது ஏற்படுத்தியது. இப்பொழுது நினைவில்கொள்ளுங்கள், அவள் பாகாலை வழிப்பட்டவள், ஒரு அஞ்ஞானி. மேலும் அதை சென்று பார்க்க வேண்டுமென்றால், ‘ஏனெனில் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏதோவொன்று அவளுடைய இருதயத்தில் பேச ஆரம்பித்தது... நீங்கள் பாருங்கள், அவள் சபையை சேர்ந்தவள். அவளுக்கு ஆசாரியர்களும் மேலும் - மேலும் பிஷப்புகளும், மற்றவர்களும் இருந்தார்கள். ஆனால் அவளுடைய சபை முழுவதும் வெறும் அறிவு சார்ந்தவர்கள், தேவனை பற்றி பாடம் (theology) படிக்கும் கூட்டம் மட்டுமே. மேலும் ஜீவிக்கிற தேவன் அங்கே இருந்து தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை அவள் கேள்விப் பட்டாள். தேவனே, இரக்கமாயிரும். அவர் இன்றைக்கும் மாறாதவராக இல்லையென்றால், ஒரு வரலாற்று தேவன் உங்களுக்கு என்ன நன்மை செய்யமுடியும்? பெந்தெ கொஸ்தேவின் அக்கினி அன்று இருந்ததுபோல இன்று இல்லையென்றால், அதைப் பற்றி பேசுவதால் அது என்ன நன்மை செய்யப்போகிறது? ஒரு மனிதன் மரிக்கும் அளவுக்கு குளிரில் நடுங்கும்போது, அவனுக்காக நீங்கள் நெருப்பை வரைந்து, முன்னொரு நாளில் இந்த நெருப்பு எரிந்தது என்று கூறினால் எப்படியிருக்கும்? அது அவனுக்கு கதகதப்பை தராது. வரையப்பட்ட வரலாற்று நெருப்பு அவனுக்கு வேண்டாம், அவன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தால், எரிகிற நெருப்பே அவனுக்கு வேண்டும். வேதாகமத்தை வாசிக்கும் ஜனங்களுக்கு ஒன்று தேவையில்லை, அது கடந்து சென்ற நாளில் ஜீவித்த ஒரு தேவன். அன்று இருந்தது போலவே மாறாமல் இருக்கும் இன்றைக்கான ஒரு தேவனை நாம் கொண்டிருக்கலாம். நிகழ் காலத்தில் இருக்கும் ஒரு தேவன் நமக்கு வேண்டும். தேவன் மௌனமாயிருந்து தன்னுடைய வாக்குத்தத்தத் திற்கு பதில் அளிக்காமல் இருக்கையில், வேதாகமத்தை பிரசங்கிப்பது என்ன நன்மை செய்யும்? உங்களுடைய கேனரி பறவையின் இறக்கைகளை வலுப்படுத்த அதற்கு நீங்கள் வைட்டமின் A யும், வைட்டமின் B யும் ஊட்டிவிட்டு அதை எல்லா நேரங்களிலும் கூண்டிலேயே வைத்திருந்தால் என்ன நன்மையிருக்கிறது? அதை நீங்கள் வெளியே விடுவதே இல்லை. உங்களுடைய வைட்டமின்கள் என்ன நன்மை செய்யும்? நம்முடைய எல்லா செமினரிகளும், தியோலஜி பள்ளிகளும், D.D,, Ph.D., மற்றும் இரட்டை L.D-களை கொண்ட நம்முடைய மகத்தான பிரசங்கிகளும் என்ன நன்மை செய்வார்கள்? நடந்து முடிந்தவற்றில் அவர் கிரியை செய்ததை அவர்கள் போதிக்கிறார்கள் அப்பொழுது செய்தது போலவே இன்றைக்கும் ஜீவித்து அதேபோல் கிரியை செய்யாத ஒரு வரலாற்று தேவனை பற்றியே அது முழுவதும் இருந்தது என்றால், அது என்ன நன்மை செய்யப் போகிறது? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் மரித்தவரல்ல; அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து எப்பொழுதும் ஜீவிக்கிறவராய், என்றென்றும் பிரசன்னமாய், என்றும் சர்வ வியாபியாய் (omnipresent) இருக்கிறார். அந்த தேவனை பற்றிதான் நாம் கேட்க விரும்புகிறோம். ஒவ்வொரு உண்மையான தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆபிரகாமின் குமாரனும் அந்த தேவனை பற்றிதான் கேட்க விரும்பு வார்கள் மேலும் அறிந்துகொள்ளவும் விரும்புவார்கள். 19. நான் இந்தியாவில் தரையிறங்கியபோது, மெத்தோடிஸ்ட் சபையின் பிஷப்பும், மற்றும் அவர்களில் பலரும் எங்களை சந்தித்தார்கள், அவர்கள், “சகோதரன் பிரன்ஹாமே, ஒரு மிஷனரியாக இங்கே வராதீர்கள்; யான்கீகளாகிய (Yankees – அமெரிக்கர்களின் பெயர் --ஆசி] உங்களுக்கு வேதாகமத்தை பற்றி எப்பொழுதும் தெரிந்ததை காட்டிலும் எங்களுக்கு அதிகமாக தெரியும்” என்று கூறினார்கள். அது உண்மைதான், அது கிழக்கத்திய புஸ்தகம். அதை நாம் மேற்கத்திய கல்வியை கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அவர், "ஆனால் யான்கீகளாகிய உங்களை தேவன் ஒரு வரத்தோடு சந்தித்ததாகவும் அது தேவனை உண்மையாகவும் மற்றும் அவருடைய வேதாகமத்தை மறுபடியும் ஜீவிக்க வைக்கும் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம். அதைதான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்றார். அப்பொழுதுதான் பத்தாயிரம் மடங்கு ஆயிரகணக் கானவர்கள் கிறிஸ்துவிடம் ஒரே தடவையில் வந்தார்கள். ஒரு ஜீவிக்கிற உண்மை அவர்களுக்கு வேண்டும். தேவன் வேறொரு காலத்தில் மிகவும் மகத்தானவராய் இருந்திருந்தால், இன்றிரவு ஏன் அவர் அப்படி இருக்கவில்லை? அவர் வரலாற்றில் இருந்து நிகழ்காலத்தில் இல்லாமல் இருந்தால் என்ன நன்மை இருக்கிறது? 20. அதே காரியத்தை தான் இந்த சிறிய ராணியும் கொண்டிருந்தாள். "ஆலயத்தில் நாம் தேவர்களை கொண்டிருக்கிறோம் அதெல்லாம் கொஞ்ச நாளாகவே இருக்கிறது. இருப்பதிலேயே நன்கு படித்த ஆசாரியர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அங்கே... அவர்கள் பேசுகிறார்கள் அவர்கள் தேவனோ (god) பதில் அளிப்பதில்லை. ஆனால் ஒரு தேவன் (God) இருக்கிறார் என்று நான் கேள்விப்படுகிறேன்...” விசுவாசம் கேள்வியினால் வரும். "தன்னுடைய ஜனங்களை நேசிக்கும் ஒரு தேவன் இருக்கிறார் என்றும் அவர் தன்னைத்தானே தம்முடைய ஜனங்களில் வெளிப்படுத்துகிறார் என்றும் நான் கேள்விப் படுகிறேன். நான் சென்று அவரை பார்க்க விரும்புகிறேன். " ஓ, நீதியின் மீது தாகமாயிருக்கும்படி ஒரு மனிதனின் அல்லது ஒரு பெண்ணின் இருதயத்தில் இருக்கும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தமான தாகம், நீங்கள் திருப்தியாவீர்கள் என்று வேதவாக்கியம் கூறுகிறது. இப்பொழுது, அவள் என்ன செய்யவேண்டியிருந்தது என்று பாருங்கள். சரி, அவள் தன்னுடைய ஆசாரியனிடம் சென்று, ஒரு சில மாதத்திற்கு எனக்கு அனுமதி தருவீர்களா, நான் இஸ்ரவேலுக்கு சென்று இந்த தேவனை பற்றி அவர்கள் பேசுகிறார்களே அவர் ஜீவிக்கிறாரா என்று பார்க்க விரும்புகிறேன், அவர் தன்னுடைய ஊழியக் காரனாகிய சாலொமோனுக்கு ஒரு வரத்தை அனுப்பி இருக்கிறார். நான் அங்கே சென்று, அது பிரத்தியட்சமாய் இருக்கிறதா என்று அதை காண விரும்புகிறேன்” என்று கூறியிருந்தால். நல்லது, அந்த ஆசாரியர்கள் அவளை போக அனுமதித்து இருக்கமாட்டார்கள், “அங்கு நடக்கும் அந்த எழுப்புதல் கூட்டத்திற்கு நம்முடைய சபை ஒத்துழைப்பு தரவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.”ஆனால் அந்த மகத்தான பரிசுத்தமான தாகம் அந்த பெண்ணின் இருதயத்தில் இருந்தால், எப்படியாயினும் அவள் சென்றுவிடுவாள். அது உண்மை. அந்த பாதையில் எதுவுமே நிற்க முடியாது. 21. எனவே தேவன் அந்த சிறிய சீமாட்டியின் இருதயத்தில் பேசிக்கொண்டிருந்தார், மேலும் அவள் அந்தக் கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவாள் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் அவளை எந்த கூட்டத்திலிருந்து நீக்க போகிறார்கள்? இழப்பதற்கென்று அவளிடம் என்ன இருக்கிறது? அவளிடம் கோட்பாட்டு முறைமைகளின் (bunch of creeds) குவியல் மட்டுமே இருந்தது. இப்பொழுது அவள் செல்கிறாள் ஏனெனில் ஜீவிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும், அவருடைய ஜனத்தாரின் மத்தியில் கிரியை செய்கிறார் என்றும் அவள் கேள்விப்பட்டாள். எனவே அவள் ஆயத்தப்பட தொடங்கினாள். இப்பொழுது, முதலாவது காரியம், அவள் பலவற்றை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது, முதல் விஷயம், ஒரு பெண்ணாயிருப்பது. அடுத்த விஷயம் என்னவென்றால், இன்னொரு காரியம், அது அவளுடைய தேசத்திலிருந்து அந்த வரம் இருந்த தேசத்திற்கு இருந்ததான நீண்ட பயணம். நீங்கள் மைல்களை எண்ணினால், அவள் அங்கே குளிரூட்டப்பட்ட காடிலாக் காரில் அல்ல, ஆனால் ஒரு ஒட்டகத்தின் முதுகின் மேல் சென்று சேர மூன்று மாதங்கள் ஆனது என்று கணக்கிடப்படுகிறது, “அவள் நியாயத்தீர்ப்பு நாளில் எழுந்து நின்று இந்த சந்ததியாரின் மீது குற்றஞ் சுமத்துவாள்” என்று இயேசு கூறியதில் வியப்பொன்றுமில்லை. காடிலாக் கார் மற்றும் எல்லாவிதமான போக்குவரத்தும் இருந்தும் கூட நாம் தெருவை தாண்டி கேட்பதற்காக வரமாட்டோம். நாம் ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்பில் அந்த பெண்ணோடு நிற்க போகிறோம். ஒரு ஒட்டகத்தின் முதுகின் மேல் அவள் மூன்று மாதங்கள் இருந்தாள். ஆனாலும் அது சரியா அல்லது தவறா என்று பார்க்கும்படி அவள் தீர்மானம் செய்திருந்தாள். அவளுடைய ஆசாரியன் நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறியிருந்தால், நல்லது, அது – அது அதோடு முடிந்திருந்திருக்கும். ஆனால் அவளே சென்று அதை பார்க்க போகிறாள். "நாசரேத்திலிருந்து நன்மை ஏதும் வருமா என்பதை வந்து பார்” என்று நத்தானியேல் அல்லது பிலிப்பு நத்தானியேலிடம் கூறியதை பற்றி நாம் கடந்த இரவு செய்தியில் கூறியது போல அவள் செய்யபோகிறாள். வீட்டில் இருந்துகொண்டு குறை கூறாதீர்கள்; வந்து கண்டறியுங்கள். அதிகமாக குற்றம் காணாதீர்கள்; அமர்ந்து, வேத வாக்கியங்களை எடுத்து அது சரியா என்பதை பாருங்கள். சத்தியத்தை அறிந்துகொள்ள அதுதான் ஒரே வழி. "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. ” அதைதான் இயேசு கூறினார். 22. ஆகவே அந்த சிறிய பெண் தன்னுடைய இருதயத்தில் கூறினாள், “நான் அங்கே போகிறேன், நானாகவே அதை கண்டறிய போகிறேன். அது அவ்விதமாகவே இருந்தால், நான் அதை ஆதரிக்க (support) போகிறேன்.” அவள் தங்கத்தையும், கற்களையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் மற்றும் விலையுயர்ந்த எல்லா வெகுமதிகளையும் ஒட்டகத்தின் மீது ஏற்றினாள். அது உண்மையாகவே தேவனாக இருந்தால், ஆதரிக்க (support) அது தகுதியானது. அது தேவன் இல்லையென்றால், ஆதரிக்க (support) அது தகுதியற்றது. அந்த பெண்ணிடம் ஏதோவொன்று இருந்தது. இப்பொழுது, அது உண்மையாக தான் இருக்க வேண்டும். அவள் கூறினாள், “என்னுடைய இருதயத்தில் ஒன்று இருக்கிறது, நான் அதை கண்டறிய போகிறேன். எனவே அவள் தன்னுடைய ஒட்டகங்களில் சரக்குகளை ஏற்றி, அவளுடைய எல்லா வேலைக்காரர்களையும் தயாராக்கினாள். இப்பொழுது, இன்னொரு காரியம் அவளுக்கு எதிராக இருந்தது. அந்த ஒட்டகங்களின் மீது அந்த எல்லா தங்கத்துடனும் மற்றும் அந்த எல்லா விலையுயர்ந்த கற்களோடும், அந்த பாலைவனத்தில் தொண்ணூறு நாட்களாக, மூன்று மாதங்களாக, ஒட்டகத்தின் முதுகின் மீது கடக்க வேண்டியிருந்தது. அந்த பாலைவனத்தில் இஸ்மவேலின் பிள்ளைகள் இருந்தார்கள், அவர்கள் கொள்ளைக்காரர்களாய் (robbers) இருந்தார்கள். அது என்னே ஒரு சிறந்த வாய்ப்பாய் அவர்களுக்கு இருந்து இருக்கும். தன்னுடைய சிறு கூட்டமாகிய ஒரு சில வீரர்களோடும், அன்னகர்களோடும், ஆலய காவலர் களோடும் இருந்த அந்த சிறிய பெண்ணை அவர்கள் எவ்வளவு சுலபமாக தாக்கி அவர்களை கொன்று குவித்திருக்க முடியும். ஆனால் உனக்கு தெரியுமா, விசுவாசத்தை பற்றி ஏதோவொன்று இருக்கிறது அது எந்த பயத்தையும் அறியாது. விசுவாசமானது அழைத்துக் கொண்டிருந்தால், எந்த பயத்தையும், எந்த சந்தேகத்தையும் நீ கருத்தில் கொள்ள தேவையில்லை. நீ முன்னேறி சென்று கொண்டே இரு. தேவன் உன்னை அழைக்கிறார்; ஒன்றும் அதை தடுக்க முடியாது. அவள் பயத்தை பற்றி ஒருபோதும் யோசிக்க கூட இல்லை ஏனெனில் அவள் ஒரு உண்மையான ஜீவிக்கிற தேவனை தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தேவனை சந்திக்கபோகிறாள். 23. அந்த ஒட்டகங்களின் மீது அவள் சென்றாள். அவள் வாசலுக்கு வந்தபோது... இப்பொழுது, உடனே செல்வதற்காக அவள் வரவில்லை... அவள் தன்னுடைய கூடாரத்தை போட்டாள், மேலும் அடுத்த காலை வேளையில் தேவனுடைய வரம் கிரியை செய்வதை பார்க்க தன்னுடைய இடத்தை எடுத்துக்கொண்டாள். அவள் கூறினாள், "இப்பொழுது வேளை வந்தது. நான் மிகவும் தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன், எனவே அந்த வரம் உண்மையாகவே கிரியை செய்கிறதா அல்லது இல்லையா என்பதை பார்க்க இப்பொழுது நான் வருகிறேன்." ஒரு சில மணிநேரங்கள் மட்டும் தரித்திருப்பதற்காக அவள் வரவில்லை; வெறும் ஒரே ஒரு கூட்டத்திற்காக மட்டும் அவள் வரவில்லை. அவள் வரவில்லை... அவள் கூறினாள், "இப்பொழுது, நான் உள்ளே சென்று அமர போகிறேன், என்னுடைய சபை போதிக்காத எதையாவது அந்த பிரசங்கியார் சொல்லும் முதல் தடவையில், நான் எழுந்து வெடுக்கென வெளியே சென்று விடுவேன்". அப்படி செய்வது அறியாமையை அல்லது சரியாக வளர்க்க படாததை அல்லது பிசாசினால் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தையை காண்பிக்கிறது. அந்த ஒன்றை தான் அது அறிவிக்கிறது. அவள் வந்தாள். அது பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது கிரியை செய்ததா என்பதை அவள் பார்க்க போகிறாள். நாம் பல காரியங்களை குறித்து பேசலாம், ஆனால் அதெல்லாம் நடந்ததா? அதுதான் அடுத்த ... ஆகவே அவள் அந்த வாசலில் கூடாரம் போட்டாள். எனக்கு அது பிடிக்கும். அது முடியும் வரை தரித்திருப்பது. அதை பற்றி கண்டறிவது. அவளை என்னால் சுருள்களுடன் காண முடிகிறது, அவைகளை வாசித்துக்கொண்டிருந்தாள், தேவன் பண்ணின வாக்குத்தத்தங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள், இந்த காரியங்கள் அதோடு ஒத்துப்போகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அங்கே இருந்தாள். 24. அந்த முதல் நாள் காலையில் என்ன நடந்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஜனக்கூட்டத்தில் மிகவும் பின்னாடி இருந்த அந்த சிறிய ராணி, அவள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பெண்ணையோ அல்லது சாலொமோனுக்கு முன்பாக வந்த யாரோ ஒருவரை கண்டபோது, வெறும் ஒரு மனிதன்தான், அந்த மகத்தான பகுத்தறியும் வரம் கிரியை செய்வதை கண்டாள்? அவள் “நான் கேள்விப்பட்ட விதமாகவே அது இருக்கிறதே” என்று நிச்சயமாக கூறியிருந்திருப்பாள். அவளுக்கான வாய்ப்பு வரும்வரை அவள் நாள் கணக்கில் தங்கியிருந்தாள். அவள் சாலொமோனுக்கு முன்பு நின்ற போது, தேவனுடைய வரம் அவள் மீது கிரியை செய்தது, ஏனெனில் அவளுடைய இருதயத்தில் இருந்த ஒவ்வொரு கேள்வியையும் சாலொமோன் அவளுக்கு தெரியப்படுத்தினான் என்று அவள் கூறினாள். அவளும் விசுவாசித்தாள். அவள் ஜனங்களின் மத்தியில், பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் நின்றவண்ணமாய், "உம்மை பற்றி நான் கேள்விப்பட்டது எல்லாமே உண்மை, நான் கேள்விப் பட்டதை காட்டிலும் மிக அதிகமான உண்மை” என்று கூறினாள். அவள் இந்த சந்ததியாரோடு எழுந்துநின்று அதை குற்றஞ்சுமத்துவாள் என்று இயேசு கூறினார், ஏனெனில் அவள் அதுபோன்ற ஒரு வரத்தை காணும்படி பூமியின் எல்லைகளில் இருந்து வந்தாள், இப்பொழுது அவளுடைய அனுபவத்தை பெற்றிருக்கிற நம்மை பற்றி என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து அந்த ஜீவிக்கிற தேவனின் எல்லாவிதமான அனுபவங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். தேவன் இன்னும் ஜீவிக்கிறார். அன்று அவர் நிஜமாக இருந்தது போலவே இன்றும் அவர் நிஜமாக இருக்கிறார். 25. அவர் தன்னை பிலிப்புவுக்கு தெரியப்படுத்திய போது... பேதுரு கூட்டத்திற்குள் வந்தபோது, அவர் அவனிடம், “உன்னுடைய பெயர் சீமோன் (அல்லது கேபா) மேலும் உன்னுடைய தகப்பனின் பெயர் யோனா...” என்று கூறினார். மேலும் அவர்கள் சென்று ஒரு மனிதனை பிடித்து அவனை இயேசுவிடம் அழைத்து வந்தபோது, அவர், “நீ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். அவன், "ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிவீர்?” என்றான். அவர், "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழ் இருந்தபோது நான் உன்னை கண்டேன்” என்றார். அவன், “ரபீ, நீர் தான் தேவனுடைய குமாரன். நீர் தான் இஸ்ரவேலின் இராஜா” என்றான். அங்கே நின்றிருந்த, அந்த யூதர்கள் என்ன கூறினார்கள்? “அது பெயெல்செபூல்; அவன் ஒரு குறி சொல்லுகிறவன்.” அவர் சமாரியாவிற்குள் சென்றபோது, அந்த பெண் தண்ணீர் குடிக்கும்படி அல்லது தனக்கு தண்ணீர் எடுக்கும் படி கிணற்றண்டைக்கு வெளியே வந்தாள், இயேசு அவளிடம் “ஸ்திரீயே, தாகத்திற்கு தா” என்று கூறியபோது. அவள், “யூதர்களாகிய உங்களுக்கு சமாரியர்களாகிய எங்களுடன் பேசுவது வழக்கமில்லையே. நான் சமாரியப் பெண்” என்றாள். அவர், “உன்னுடன் பேசுவது யார் என்பதை நீ அறிந்திருந்தால், நீ என்னிடம் தாகத்திற்கு கேட்டிருப்பாய்” என்றார். அவளின் பிரச்சனை என்னவென்பதை கண்டறியும் வரை அவர் அந்த பெண்ணோடு பேசினார், “உன்னுடைய புருஷனை அழைத்துக்கொண்டு வா என்றார். அவள், “எனக்கு புருஷனில்லை” என்றாள். “உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்; இப்பொழுது உன்னோடு இருக்கிறவனும் உனக்கு புருஷனல்ல. நீ சரியாய் சொன்னாய்” என்றார். அவரை ஒரு பிசாசு என்றோ அல்லது பெயெல்செபூல் என்றோ அவள் கூறவில்லை. நான் இதை மறுபடியும் மேற்கோள் காட்டுகிறேன். இன்றிரவு அமெரிக்காவில் இருக்கும் தொண்ணூறு சதவீத பிரசங்கியார்களை காட்டிலும் அவள் தேவனை பற்றி அதிகமாக அறிந்திருந் தாள். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்' என்றாள். ஆவிக்குரியவளாக, அது அவளுக்கு பழக்கமாயிருந்தது, அதினால் போதிக்கப்பட்டிருந்தாள். “நாங்கள் அறிவோம். மேசியா வரும்போது இவை எல்லாவற்றை யும் எங்களுக்கு அறிவிப்பார் என்பதை சமாரியர்களாகிய நாங்கள் அறிவோம். ஆனால் நீர் யார்?" அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் நகரத்திற்குள் தன்னுடைய சொந்த நகரமாகிய சமாரியாவிற்குள் ஓடிசென்று, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ?" என்றாள். அந்த நாட்களில் அது புறஜாதிகளிடம் செய்யப்படவில்லை. அது இப்பொழுதுதான் செய்யப்படுகிறது. அவ்விதத்தில்தான் அவர் தன்னை அப்பொழுது அறிவித்தார். 26. இப்பொழுது, ஷீபாவின் ராணி அந்த சந்ததியாரோடு எழுந்து நின்று அவர்களை குற்றஞ்சுமத்தினால்... ஓ, என் ஜனங்களே கேளுங்கள். தென்தேசத்து இராஜஸ்திரீ, எழுந்து நின்று அந்த சந்ததியாரின் மீது குற்றஞ்சுமத்துவாள் என்று இயேசு சொன்னார், மேலும் அது நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக போதிக்கபட்டிருக்கிறது, இன்றிரவு இங்கே அவர் அதே காரியத்தை செய்துகொண்டிருக்கிறார், அவள் சாட்சிகொடுக்கும்போது இந்த சந்ததியாரை வைத்து என்ன செய்வாள்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு சபைக்கு செல்லும் நாம்... பாவம் என்றால் என்ன? அவிசுவாசம்தான். நீங்கள் எவ்வளவு பக்தியாய் இருக்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டே அல்ல. மிகவும் நல்லவர்களாயிருக்கிறீர்கள், நீங்கள் இதை, அதை அல்லது மற்றதை செய்யமாட்டீர்கள், முகமதியர்களும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். புத்தமதத்தினரும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். மதம் ஒரு காரியமாய் இருக்கிறது, இரட்சிப்போ வேறொரு காரியமாயிருக்கிறது. மதம் என்பது ஒரு போர்வை. இரட்சிப்பு என்பது தேவனுடைய ஈவு. அவள் எழுந்து நின்று இந்த சந்ததியாரை குற்றஞ்சுமத்துவாள். ஏன்? தேவனுடைய வரம் ஒரு மனிதனின் மூலமாக கிரியை செய்ததை அவள் கண்டபோது அவள் நின்றாள்; அவள், “அது தான் உண்மை” என்றாள். அவள் யேகோவாவை தன்னுடைய தேவனாக ஏற்றுக்கொண்டாள். பின்பு அந்த அன்னகர்கள் பெந்தெகொஸ்தேவிற்கு பிறகு அந்த செய்தியை, இயேசுவின் பிறப்பு, மரிப்பு, உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியின் வருகையை பற்றி ஜனங்களிடம் எடுத்து சென்றார்கள். ஓ, தேவன் தன்னுடைய நிலைப்பாட்டில் (stand) நின்றால், நீ உன்னுடைய நிலைப்பாட்டில் (stand) நின்று நீ என்ன செய்யப்போகிறாய் ? 27. இங்கே சில வருடங்களுக்கு முன்பு மத்திய அமெரிக்காவில் டேனியேல் கிரீன்பில்டு என்று பெயர் கொண்ட ஒரு பிரசங்கியார் இருந்தார், ஒரு மகத்தான வல்லமையான ஊழியக்காரர். உங்களில் பல குருமார்கள் (clergymen) அவருடைய புஸ்தகத்தை வாசித்து இருப்பீர்கள். ஒரு இரவு அவருக்கு ஒரு சொப்பனம் வந்தது, அவருக்கு சொப்பனம் வந்த அந்த இரவு அவர் சென்று விட்டார் என்று – அவர் மரித்து தான் பரலோகத்திற்கு சென்று விட்டதாக அவர் நினைத்தார். அவர் வாசலண்டைக்கு சென்றபோது, வாயில்காப்போன் வெளியே வந்து, “இந்த இடத்தை அணுகுவது யார்?” என்று கேட்டான். அவர், “நான் டேனியேல் கிரீன்பில்டு, அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு சுவிசேஷகன்” என்றார். கூறினான், “ஒரு நிமிடம், திரு. கிரீன்பில்டு அவர்களே, உங்களை என்னால் உள்ளே அனுமதிக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். உங்களுடைய பெயர் என்னுடைய புஸ்தகத்தில் இருக்கிறதா, எல்லாம் சரி. அவன் அந்த புஸ்தகத்தை பார்த்தான். அவன் திரும்பி வந்து, “ஐயா, என்னை மன்னிக்கவும், ஆனால் தங்களுடைய பெயர் அந்த புஸ்தகத்தில் இல்லை. நீங்கள் புறப்பட வேண்டும்” என்று அவன் கூறினான். “ஓ”, அவர் கூறினார், “நிச்சயமாக நீ தவறாய் கூறுகிறாய். நான் சுவிசேஷத்தை பிரசங்கித்தேன். நான் ஒரு நல்ல ஜீவியத்தை ஜீவித்தேன்.” “நிச்சயமாக என்னுடைய பெயர் அந்த புஸ்தகத்தில் இருக்கிறது” என்றார். “என்னை மன்னிக்கவும்," அவன் கூறினான், “அது இங்கே இல்லை. ' அவர், “அப்படியானால் நான் என்ன செய்வது?” என்றார். அவன், “நீங்கள் உங்களுடைய வழக்கை அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாம்” என்றான். “சரி,” அவர் கூறினார், “எனக்கு வேறு வழியில்லை; அப்படியானால் அதைதான் நான் செய்யவேண்டும்”. 28. பயங்கரமான வேகத்தில் அவர் காற்றில் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது போன்று இருந்ததாக அவர் கூறினார். அவர் ஒரு ஒளியின் பிரசன்னத்திற்குள் வந்தார். அந்த ஒளி பிரகாசமாக பிரகாசமாக அவருடைய வேகம் குறைந்து கொண்டே வந்து, குறைந்ததாம். சிறிது நேரத்தில், அவர் ஒரு நிறுத்தத்திற்கு வந்தார். அந்த ஒளி ஏதோவொரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரவில்லை, ஆனால் அது அவரை முழுவதும் சுற்றி இருந்தது. "ஒ," அவர், "அந்த பிரசன்னத்தில் நின்றது என்னே ஒரு உணர்வு” என்றார். அந்த ஒளியில் இருந்து ஒரு சத்தம் வந்து, “என்னுடைய சிங்காசனத்தை அணுகுவது யார்?” என்று ஒரு பெரிய முழக்கம் போல கூறியது. அவர், ஓ யேகோவா தேவனே, நான்தான் சுவிசேஷகனாகிய டேன் கிரீன்பீல்டு. பரலோகத்தின் வாசலில் இருந்து நான் புறக்கணிக்கப் பட்டேன், உம்முடைய நீதியில் என்னுடைய வழக்கை மேல் முறையீடு செய்யும்படி என்னிடம் சொல்லப்பட்டது" என்றார். “மிகவும் நல்லது,” அவர் கூறினார், “என்னுடைய நியாய பிரமாணத்தினால் உன்னை சோதித்துப்பார்க்கிறேன்.” அவர், “டேனியல் கிரீன்பீல்ட், நீ எப்பொழுதாவது பொய் கூறியிருக்கிறாயா?” என்றார். அவர் கூறினார், “அந்த நேரம் வரை நான் ஒரு நேர்மையான மனிதன் என்றும், உண்மையானவன் என்றும் நான் நினைத்திருந்தேன்.” ஆனால் கூறினார், “ஓ, அப்பொழுது அந்த பிரசன்னத்தில், நான் பல சிறிய நேர்மையற்ற, இரட்டை அர்த்தமுள்ள காரியங்களை கூறியிருப்பதை நான் கண்டேன்.” அவர், “ஆம், கர்த்தாவே, நான் பொய் கூறியிருக்கிறேன்” என்றார். அவர், "டேனியல் கிரீன்பீல்ட், நீ எப்பொழுதாவது திருடியிருக்கிறாயா?" என்றார். அவர் கூறினார், “எதிலுமே, நான் நேர்மையாகதான் இருந்தேன் என்று நான் நினைத்தேன். ஆனால் அந்த ஒளியின் பிரசன்னத்தில், பல சிறிய காரியங்களில் நான் செய்தது நெறிமுறையற்றதாயிருந்தது என்பதை நினைவு கூர்ந்தேன்.” 29. சகோதரனே, சகோதரியே, உங்களுடைய சபையில், உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களின் அருகில், உங்களுடைய பாஸ்டரின் பிரசன்னத்தில், நீங்கள் மிகவும் நல்லவர்கள் போன்று தோன்றலாம், ஆனால் நீங்கள் அந்த ஒளியின், அந்த பரிபூரணமான ஒளியின் பிரசன்னத்தில் நிற்கும் வரை நீங்கள் காத்திருங்கள். அப்பொழுது அவர் மீண்டுமாக வந்த ஒரு சத்தத்தை கேட்டதாக கூறினார், “டேனியல் கிரீன்பீல்ட், என்னுடைய நீதிக்கு பரிபூரணம் தேவைப்படுகிறது. உன்னுடைய ஜீவியத்தில் நீ பரிபூரணமா யிருந்தாயா?” என்று கேட்டதாம். கூறினார், “இல்லை, கர்த்தாவே. நான் பரிபூரணமாக இல்லை.” மேலும் கூறினார், “அந்த பெரிய முழக்கம் (blast) வரப்போவதை கேட்க நான் தயாராயிருந்தேன்.” “என்னுடைய எலும்புகளின் இணைப்புகள் விடுப்பட்டு போனது போன்று இருந்தது, என்னால் நிறுத்த முடியாத அளவுக்கு நான் உதறல் கொண்டேன்” என்றார். “அப்பொழுது நான் ஒரு சத்தத்தை கேட்டேன், நான் கேட்டதிலேயே மிகவும் இனிமையான சத்தம்" என்றார். “எந்த தாயாலும் அவ்வாறு பேச முடியாது” என்றார். “நான் பார்க்கும்படி திரும்பினேன், நான் இதுவரை கண்டதிலேயே மிகவும் கனிவான முகத்தை கண்டேன்” என்றார். மேலும், “அவர் நடந்து வந்து தன்னுடைய கரங்களை என்னை சுற்றி போட்டுக் கொண்டு, அவர், 'பிதாவே, அது உண்மைதான். டேனியல் கிரீன்பீல்ட் தன்னுடைய ஜீவியத்தில் பரிபூரணமாக இருந்ததில்லை, ஆனால் அவன் தன்னுடைய ஜீவியத்தில் ஒன்றை செய்திருக்கிறான்: அவன் பூமியில் எனக்காக நின்றான், எனவே இங்கே பரலோகத்தில் நான் அவனுக்காக நிற்பேன்” என்றார். 30. இன்றிரவு நான் வியக்கிறேன், நண்பனே, நாம் ஜனங்களின் கூட்டமாயிருக்கையில், ஒருவேளை கடைசி தடவையாக ஒருவரை ஒருவர் அழிவுள்ள மனிதர்களாக (mortals) நாம் சந்திக்கலாம், இன்றிரவு நீ மரித்தால், உனக்காக யார் நிற்க போகிறார்கள்: உன்னுடைய சபையா, உன்னுடைய பாஸ்டரா, உன்னுடைய அம்மாவா, உன்னுடைய அப்பாவா? நான் உன்னை ஒருவரிடம் அறிமுகம் செய்துவைக்கிறேன். இன்றிரவு நீ அவருக்காக நின்றாயானால், அப்பொழுது அவர் உனக்காக நிற்பார். ஒரு சிறிய ஜெபத்திற்காக நாம் தலைகளை தாழ்த்துகையில் அதைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். நாம் இந்த ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பு, வாலிபர்களாயிருந்தாலும் வயதானவர்களாயிருந்தாலும் நீங்கள் மிகவும் நேர்மையாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த நிமிடத்தில் பயபக்தியாய், நீ அவரை ஒருபோதும் முகமுகமாய் சந்தித்து, உன்னுடைய பாவங்களை பற்றி அவரிடம் பேசினதில்லையா, மேலும் அவர் உன்னை உன் பாவங்களுக்கு மன்னித்தார் என்பதை அறியவில்லையா? நீ சபையில் சேர்ந்திருக்கலாம். அது எல்லாம் சரிதான். உன்னுடைய கோட்பாட்டின் அடிப் படையில் நீ ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம் அல்லது இன்னும் என்ன. உன்னுடைய முழு கேட்டிசிசத்தையும் (catechism) நீ தெரிந்து வைத்திருக்கலாம். வேத வாக்கியத்தில் நீ ஒரு நல்ல பண்டிதனா யிருக்கலாம், ஆனால் நீ அவரை அறிந்திருக்கிறாயா? நீ அவரை அறியவில்லை என்றால், இப்பொழுது நீ தேவனிடத்தில் மிகவும் உண்மையாக இருப்பாயா? நீ உண்மையாக இல்லையென்றால், இப்பொழுது தேவன் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார், இங்கிருக்கும் பரிசுத்த ஆவியாகிய தேவன், இப்பொழுது அவர் உன்னோடு பேசி, "பிள்ளையே, நீ தவறாயிருக்கிறாய் என்பது உனக்கு தெரியும். இன்றிரவு உனக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரித்தால், உன்னால் என்னுடைய பிரசன்னத்தில் நிற்க முடியாது என்று உனக்கு தெரியும். என் குமாரனை இப்பொழுதே ஏற்றுக்கொள்” என்று கூறினால்... உங்களுடைய கரத்தை உயர்த்தி, “தேவனே, என்னை நினைவுக்கூறும். உம்முடைய இரக்கங்கள் இப்பொழுதே எனக்கு வேண்டும். நீர் இப்பொழுது எனக்கு உதவி செய்தால் நான் உமக்காக நிற்பேன் என்று என் கரத்தை உயர்த்தி தெரியப்படுத்துகிறேன்” என்று கூறுங்கள். கட்டிடத்தில் இருக்கும் அனைவரும், உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா,? தேவன், உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை. என்னுடைய இடது பக்கத்தில் இருக்கும் பால்கனியில், இங்கே மேலே, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். "தேவனே, இரக்கமாயிரும்." வலது பக்கத்தில் இருக்கும் பால்கனியில் பின்னாடி, உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்துவீர்களா, யாராவது, "தேவனே, இரக்கமாயிரும்" என்று கூறுவீர்களா? வலது பக்கத்தில் இருக்கும் பால்கனியில்... இப்பொழுது, வெட்கப்படாதீர்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள்... "மனுஷருக்கு முன்பாக நீ என்னை குறித்து வெட்கப்பட்டால், நானும் உன்னை குறித்து பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வெட்கப்படுவேன்.” அதை சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும், நீங்கள் எவ்வளவு செய்திருந்தாலும் அதெல்லாம் பொருட்டே அல்ல; தேவனுடைய பிரசன்னத்தில் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. ஒன்று நீங்கள் கிறிஸ்துவுக்காக நிற்க வேண்டும் அல்லது நீங்கள் கிறிஸ்துவுக்காக நிற்காமல் இருக்க வேண்டும்.. 31. சுமார் இருபது அல்லது முப்பது கரங்கள் உயர்த்தப் பட்டிருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு, இன்னும் கொஞ்சம் அதிகமாக உயர்த்தப்படுமா? நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்கையிலே, நான் ஆர்கன் வாசிப்பவரிடம் (organist), ஆர்கனில் (organ) ஒரு இராகத்தை மீட்டு தரும்படி நான் கேட்க போகிறேன். கிறிஸ்தவர்கள் ஜெபிக்கட்டும். இங்கிருக்கும் சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாரும் பார்க்க வேண்டாம்; உங்களுடைய தலைகளை தாழத்தியவாறே இருங்கள். இப்பொழுது, நண்பர்களே, தேவனுடைய பிரசன்னத்தில், என்றோ ஒருநாளில் நான் அவர் பக்கமாக நின்று இன்றிரவு கொடுத்த செய்திக்காக கணக்கொப்புவிக்க வேண்டும் மேலும் நீங்களும் கணக்கொப்புவிக்க வேண்டும் என்பதை அறிந்தவனாய், தேவனுடைய கிருபையால் இன்றிரவு, நான் உலகத்தின் எல்லா பாவங்களையும் எடுத்துப்போடக் கூடிய இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வழங்குகிறேன். அந்த நாளில் அவர் உனக்காக நிற்கும்படியாக, இன்றிரவு நீ அவருக்காக நிற்பாயா? அங்கிருக்கும், ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. வேறு யாரேனும் உங்களுடைய கரத்தை உயர்த்தி கூறுவீர்களா, "தேவனே, என் மீது இரக்கமாயிரும்.” இப்பொழுது, அது உங்களை பொறுத்தது. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது ஒரு நல்ல நிலைப்பாடு. இங்கிருக்கும் சகோதரியே, இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பின்னாக இருக்கும் ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களுடைய கரத்தை காண்கிறார். ஓ தேவனே, என் மீது இரக்கமாயிரும். நீர் எனக்கு உண்மையாகவே தேவையாயிருக்கிறீர். 32. உங்களுடைய தலைகள் தாழ்த்தியிருக்கையில், ஒவ்வொருவரும் ஜெபிக்கையில், நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள் எப்பொழுது போகப்போகிறீர்கள் என்று வாலிபமாயிருந்தாலும் அல்லது வயதானவர்களாயிருந்தாலும் யாருக்குமே தெரியாது. மனிதன் ஒருமுறை மரிக்க வேண்டும் என்றும் அதன்பின் நியாயத்தீர்ப்பு என்றும் நியமிக்கப் பட்டிருக்கிறது. நீ மேலே சென்று, நீ தவறாயிருந்தாய் என்பதை கண்டுக் கொண்டால் அது வருத்தமாயிருக்காதா? இங்கிருக்கும் சீமாட்டியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுடைய கரத்தை காண்பார். நான் சற்றே ஒரு நிமிடம் காத்திருக்கிறேன். உணர்ச்சியற்ற கடின நெஞ்சமுள்ளவர் களாகாதீர்கள் (calloused); இருதயத்தில் மென்மையாயிருங்கள். நீங்கள் அறிவீர்கள் உலகமானது... சபை என்று பெயருக்கு அழைக்கப் படுபவர்கள் பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், வானொலி களுக்கும், தணிக்கை செய்யப்படாத (uncenscored) நிகழ்ச்சிகளுக்கும் தங்களுடைய இருதயத்தை செலுத்துகிறார்கள் மேலும் அவர்களுடைய இருதயமானது உணர்வற்ற கடினநெஞ்சும் இருளும் ஆகும்வரை அவர்கள் “உண்மை சம்பவம்” (True Story) என்கிற பத்திரிக்கைகளை வாசிக்கிறார்கள்: மென்மை தன்மை கொஞ்சமும் இல்லை, கண்ணீர் துளிகள் கொஞ்சம் கூட இல்லை. பெண்களிடம் நாணம் என்பதே இனிமேல் இல்லை. ஆண்களுக்கு முன்பாக கூச்சம் என்பதே கிடையாது. இது ஒரு பரிதாபமான நேரமல்லவா? ஆனால் இதெல்லாம் குறிப்பிட்ட குறிப்பிட்ட ஸ்புட்னிக் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்பு நடைபெற வேண்டும். அது நடக்கும் என்று தேவன் கூறினார். ஓ, பாவியான நண்பனே, இன்றிரவு நீ அந்த நிலையில் இருந்தால், உன்னுடைய பாதையில் அதை தாண்டி வந்து இயேசுவை ஏற்றுக்கொள். 33. சில காலத்துக்கு முன்பு, நான் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவளிடம் ஏதோவொன்றை கூற வேண்டுமென்று நான் வழிநடத்தப்படுவதாக உணர்ந்தேன். நான் கூறினேன், “சகோதரியே”, ஆராதனை முடிந்த பின்னர், நான், "நீங்கள் கிறிஸ்துவண்டை வருவீர்களா?” என்றேன். அவள், “நான் சபையை சேர்ந்தவள் என்னிடம் யாராவது பேசவேண்டும் என்று நான் விரும்பினால் அறிவு இருக்கிற பாஸ்டர் யாரையாவது அழைப்பேன்” என்றாள். “என்னை நீ அவமானப்படுத்த வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதே ” என்றாள். நாஷ்வில்லே, டென்னிசியில் ஒரு சிறிய பாப்டிஸ்டு சபைக்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய பழைய ரோஜா புதருக்கு அருகில் நின்றவாறு கூறினேன் “மிகவும் நல்லது. என்னை மன்னித்துவிடுங்கள். என்னையும் உங்களையும் தவிற இது வேறு யாருக்குமே தெரியாது. நான் உங்களை அவமானப்படுத்த நினைக்கவில்லை என்றேன். நான் உங்களிடம் கேட்டேன் ஏனெனில் நான் வழிநடத்தப் படுவதை உணர்ந்தேன் என்று கூறினேன்.” அந்த இரவை ஒருபோதும் மறக்கவே முடியாது: காற்று அடித்துக் கொண்டிருந்தது, சந்திரன் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அவள் தன்னுடைய சிறிய வர்ணம் தீட்டப்பட்ட உதடுகளையும் தன்னுடைய சிறிய மூக்கையும் சுழித்து விட்டு, நக்கலாக சிரித்தபடியே சென்று, ஒரு கூட்ட பையன்களை சேர்ந்துகொண்டாள். சுமார் ஒரு வருடம் கழித்து, நான் அதே நகரத்தின் வழியாக கடந்து சென்றேன், அங்கே ஒரு கூட்டத்தை நடத்தினேன். நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிப சீமாட்டி தன்னுடைய மோசமான கீழ்சட்டையுடன் (skirt) தெருவில் நடந்து செல்வதை நான் கண்டேன். நான் அவளை பார்த்து, “நிச்சயமாக அது அவளல்ல” என்று நினைத்தேன். நான் திரும்பி அவளை பின்தொடர ஆரம்பித்தேன். அவர்கள் கடந்து செல்லும்போது அவள் என்னை பார்த்தாள். நான் அவளை சந்தித்தேன். அவள் “ஹலோ, பிரசங்கியாரே” என்றாள். நான், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் அந்த...” என்றேன். அவள், “நான் அவள்தான்” என்றாள். அவள் நின்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பர்சை எடுத்து, ஒரு சிகரெட்டை இழுத்து, "ஒன்று வேண்டுமா" என்றாள். நான், “உனக்கு வெட்கமாக இல்லையா" என்றேன். அவள், “சரி நீ வேண்டுமானால் என்னுடைய பாட்டிலில் இருந்து கொஞ்சம் குடி” என்றாள். நான், “உன்னுடைய அப்பாவுக்கு இது தெரியுமா?' என்றேன், சபையில் ஒரு டீக்கன். மேலும் அவள், “பிரசங்கியே, உன்னிடம் நான் ஒன்றை கூறவேண்டும். அந்த புதருக்கு அருகில் நீ என்னோடு பேசிய அந்த இரவு உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்றாள். நான், “என்னால் அதை ஒருபோதும் மறக்க முடியாது” என்றேன். அவள், ‘அதுதான் எனக்கான கடைசி அழைப்பாய் இருந்தது” என்றாள். அந்த அழகிய இளம் பெண் கூறிய கருத்து இதோ, அவள் இந்த நவீன வாலிப ராக் மற்றும் ரோலுக்குள் (tock-and-roll stuff) சென்றுவிட்டாள். அவள், “பிரசங்கியே, என்னுடைய அம்மாவின் ஆத்துமா ஒரு ரொட்டி போல நரகத்தில் வறுக்கப்படுவதை பார்த்து சிரிக்க கூடிய அளவுக்கு என்னுடைய இருதயம் அவ்வளவு கடினமாகிவிட்டது” என்றாள். இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையே இருக்கும் கோட்டை கடந்து விட்டாள். 34. ஓ, நண்பனே, அதை கடந்து விடாதே. இளம் வயதிலுள்ள ஜனங்களே, நாம் இன்னும் ஒரு நிமிடம் கூடுதலாக காத்திருக்கையில் நீங்கள் கிறிஸ்துவை இன்றிரவு ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா. உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், “என்னுடைய...” என்று நீங்கள் கூறுவீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது; அது நல்லது. இன்னும் அநேகர் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். நல்லது. அப்படியானால் நாம் ஜெபிக்கலாம். நித்தியமானவரும் ஸ்தோத்தரிக்கப்பட்டவருமான தேவனே, இன்றிரவு இந்தக் கூட்டத்தில் இது நின்றிருக்க கூடாது என்பதை அறிந்து, தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். "முதலாவது பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று எழுதியிருக்கிறது. அநேக கரங்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஒரு தீர்மானத்தை செய்திருக்கிறார்கள் என்பதை அது காட்டுகிறது. அவர்களுடைய கரங்கள் கீழே தொங்கவிடப் படவேண்டுமென்று அறிவியல் கூறுகிறது, ஆனால் ஒரு ஆவி அவர்களுக்குள் இருந்து அந்த விதியை அறிவியலின் விதிகளுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தி தங்களின் சிருஷ்டிகரிடம் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய அன்பின் வெகுமதிகள். அவர்கள் கிறிஸ்துவுக்கான அன்பின் வெகுமதிகள் அதாவது தேவன் அவர்களை கிறிஸ்துவுக்கு கொடுக்கிறார். ஒருவனாலும் அவர்களை அவருடைய கையிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, அவர்களை கடைசி நாளில் எழுப்புவீர். மரணம் அவர்களை விடுதலையாக்கி தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரும் வரையில், அவர்களுடைய ஆத்துமாக்கள் இனிமையாக இருந்து பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தினால் தேன் பூசப்பட்டு இருக்கட்டும், மேலும் தேவனுடைய பிரசன்னத்திற்குள், அவருடைய இரத்தத்தால் மூடப் பட்டவர்களாய், கழுவப்பட்டு மீண்டுமாக புதுபிக்கப் படட்டும். அதை அருளும், கர்த்தாவே. தேவனாகிய கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் அதை இப்பொழுதே செய்து, அவர்களை கர்த்தராகிய இயேசுவிடம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களாய் அளிக்கட்டும். இதை நாங்கள் அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக கேட்கிறோம். ஆமென். 35. அதிலிருந்து நாம் ஒரு பத்தியை பாடலாம், "இரட்சகரே, இரட்சகரே, என்னுடைய தாழ்மையான அழுகுரலை கேட்டருளும்.' எத்தனை பேர் மிகவும் நன்றாக உணருகிறீர்கள், உங்களுடைய கரங்களை சற்றே உயர்த்துங்கள், தேவன் இங்கே இருக்கிறார் என்பதை உணருகிறீர்களா? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீங்கள் நேசிக்கவில்லையா. இப்பொழுது, நிதானமாக, பயபக்தியாய், ஆவிக்குரிய விதத்தில், நம்முடைய கரங்களை நாம் உயர்த்தி, ஃபென்னி கிராஸ்பியின் (Fanny Crosby's) அருமையான பழைய பாடலை பாடலாம், இரட்சகரே, இரட்சகரே, என்னுடைய தாழ்மையான அழுகுரலை கேளும். மற்றவர்களை நீர் அழைத்துகொண்டிருக்கும்போது, என்னை கடந்து சென்று விடாதேயும். என்னுடைய எல்லா ஆறுதலுக்குமான ஊற்று நீரே, என் ஜீவனைக் காட்டிலும் மேலானவரே, பூமியில் உம்மைத்தவிர அல்லது பரலோகில் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு. இப்பொழுது அதை நாம் பாடலாம், இரட்சகரே, இரட்சகரே, என்னுடைய தாழ்மையான அழுகுரலை கேளும். போது (முன்னே வருமாறு). என்னை கடந்து சென்றுவிடாதேயும். 36. ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா. இது செய்தி முடிந்த ஒரு நேரமாயிருக்கிறது; இப்பொழுது இது ஆராதனையின் நேரம். சபையின் இந்த மகிமையான பழைய சங்கீதத்தை நாம் பாடலாம், என் விசுவாசம் உம்மையே நோக்கிடும், கல்வாரியின் ஆட்டுக்குட்டியாகிய உம்மையே, தெய்வீக இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது செவிகொடுமே, என்னுடைய எல்லா குற்ற உணர்வுகளையும் எடுத்துப்போடும், இந்நாள் முதற்கொண்டு நான் முற்றிலும் உம்முடையவனாய் இருக்கட்டும். எத்தனை பேருக்கு அது தெரியும்? இப்பொழுது நாம் அதை ஆவியில் பாடலாம், ஆராதனையில் நீங்கள் கர்த்தரை இப்பொழுது ஆராதிக்கையில். எல்லாம் சரி. இரட்சகரே, இரட்சகரே, என்னுடைய தாழ்மையான அழுகுரலை கேளும். மற்றவர்களை நீர் அழைத்துக்கொண்டிருக்கும்போது, என்னை கடந்து சென்று விடாதேயும். 37. அது அவ்விதமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்தக் கட்டிடத்தில் இருக்கும் யாரேனும் சிறிது நேரத்திற்கு முன்பு தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டிருந்து, இப்பொழுது தேவன் உண்மையாகவே உங்களுக்கு ஏதோவொன்றை செய்ய வேண்டும் என்பதற்காக, உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? நீங்கள் செய்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் எந்த தவறையும் செய்ய மாட்டார் என்பது உங்களுக்கு தெரியும். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுக்கு அதை அருளுவாராக. பாருங்கள், தேவன் எந்த தவறையும் செய்யமாட்டார். நாம் மட்டும் ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றினால் அவர் தன்னுடைய எல்லா செயல்களிலேயும் பரிபூரணமாயிருக்கிறார். இப்பொழுது, “என் விசுவாசம் உம்மையே நோக்கிடும்.” எல்லாம் சரி, சகோதரனே, நீங்கள் விரும்பினால். இப்பொழுது ஒவ்வொருவரும் ஒன்றாக.(எல்லாம் சரி). என் விசுவாசம் உம்மையே நோக்கிடும் கல்வாரியின் ஆட்டுக்குட்டியாகிய உம்மையே, ஓ, தெய்வீக இரட்சகரே! இப்பொழுது (இப்பொழுது நம்முடைய கரங்களை நாம் உயர்த்தலாம்) நான் ஜெபிக்கும்போது செவிகொடுமே, என்னுடைய எல்லா பாவத்தையும் எடுத்து போடும். ஓ இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாய் இருக்கட்டும். ஓ, ஆவியில் ஆராதனை செய்வதை குறித்து ஏதோவொன்று இருக்கிறது, அந்த புறாவின், பரிசுத்த ஆவியானவரின் நற்குணமும் தயவும், சமாதானத்தை கொண்டு வருகிறது. ஓ, நான் சற்றே... அதிலிருந்து இன்னொரு பத்தியை நாம் பாடலாம். இருண்ட குழப்பமான ஜீவியத்திற்குள் நான் அடி எடுத்து வைக்கும் போதும் (இப்பொழுது அவரை நோக்கி பாருங்கள்). துயரம் என்னை சூழ்ந்து படர்ந்துகொள்ளும்போதும், ஓ, நீரே என் வழிகாட்டியாய் இரும். பகலாக மாறும்படி இருளுக்கு கட்டளையிடும், கவலைகளின் கண்ணீர்களை துடையும். என்னை ஒருபோதும் உம்மை விட்டு விலகி செல்ல விடாதேயும். 38. (சகோதரன் பிரன்ஹாம் மௌனமாக பாட ஆரம்பிக்கிறார் - ஆசி தேவனாகிய கர்த்தாவே, இசையானது மிருதுவாக போய்க்கொண்டிருக்கையில், மகிமைக்கு சென்று உம்முடைய பிரசன்னத்தில் இருக்கும் எங்களுடைய பிதாக்கள் வருடங்களுக்கு முன்பு பாடிய இந்த கிருபையான பழைய பாடலை ஜனங்கள் மௌனமாக பாடுகையில்... இந்த ஜனங்களின் வரிசையோடு கூட தூதர்கள் தங்களுடைய ஸ்தானங்களில், தங்களுடைய இடங்களில் இன்றிரவு நின்று, இப்பொழுது நீர் எங்கும் நிறைந்திருக்கிறீர் (omnipresence) என்பதை, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்துகொள்ள உதவிசெய்யட்டும், மேலும் கர்த்தாவே எங்களுடைய இருதயத்தில் இருக்கும் வாஞ்சையை, எங்களுக்கு அருளும். ஒருவேளை, இன்றிரவு இந்தக் கட்டிடத்தை விட்டு நாங்கள் புறப்பட தயாராகும்போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்கள் கூறியது போன்று நாங்களும் கூறும் படியாக இருக்கட்டும். முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பிறகு, அவர்கள் வேதவாக்கியத்தை பற்றி பேசியபடியே சாலையில் நடந்தார்கள், அப்பொழுது இயேசு காட்சி அளித்தார். அவர் யார் என்பதை அவர்கள் அறியவில்லை, ஆனால் அவர் அவர்களோடு நடந்து அந்த முழு நாளும் அவர்களை வேத வாக்கியங்களால் தேற்றினார். இரவு நேரம் வந்தபொழுது, அவர்கள் கட்டிடத்திற்குள் சென்று, அவரையும் உள்ளே வரும்படி அழைத்தார்கள். கர்த்தாவே, நாங்களும் அதைதான் செய்திருக்கிறோம். நீர்கதவை சாத்தி -மேலும் அவர்களோடு அமர்ந்தபோது, நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்தது போன்று ஏதோ வொன்றை நீர் செய்தீர். நீர் செய்த அந்த அற்புதத்தினால், அது நீர்தான் என்பதை அவர்கள் அடையாளங்கண்டு கொண்டனர். அவர்களுடைய பார்வையிலிருந்து நீர் மறைந்துவிட்டீர், ஆனால் அவர்கள் துரிதமாக ஓடி, "வழியிலே அவர் நம்மோடு பேசியபொழுது நம்முடைய இருதயங்கள் நமக்குள் கொழுந்துவிட்டு எரியவில்லையா” என்றார்கள். அவர்கள் தங்கள் சக ஜனங்களிடம் சென்று, சிலுவையில் அறையப்பட்ட அதே இயேசுவை அவர்கள் கண்டதாக, அதாவது மறுபடியும் உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றும், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்த அதே காரியங்களை செய்கிறார் என்றும் அறிவித்தார்கள். கர்த்தாவே, இன்றிரவு எங்களுக்கும் அதையே செய்யும். அதை அருளும். இப்பொழுது எங்களுக்கு வேத வாக்கியத்தை தந்து, பரிசுத்த ஆவியானவர் இந்த வேத வாக்கியத்தின் மூலமாக கிரியை செய்வாராக. இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 39. இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால் சில நிமிடங்கள், மிகவும் அமைதியாயிருங்கள். அந்த தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் எத்தனை பேர் இதற்கு முன்பாக என்னுடைய கூட்டங்களில் ஒன்றில் கூட இருந்ததில்லை? உங்களுடைய கரங்களை நான் பார்க்கட்டும். என்னே, கூட்டத்தில் தொண்ணூறு சதவீதம் பேர். நான் நினைக்கிறேன், Dr. வெயில், இன்றிரவு... நான் ஒரு பிரசங்கியார் இல்லை, அது உங்களுக்கு தெரியும், ஆனால் நான்... தன்னுடைய சபையோடு கிரியை செய்யும்படி தேவன் எனக்கு வேறொரு வழியை தந்திருக்கிறார், அது பரிசுத்த ஆவியின் ஒரு வரத்தின் மூலமாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு வேத வாக்கியத்தை கொடுக்கப் போகிறேன், அதை குறித்து அநேகமாக அவர் உங்களிடம் பலவற்றை சொல்லியிருக்கக் கூடும்... எத்தனை பேருக்கு தெரியும் இந்த – இயேசு, அவரே கூறினார், அதாவது பிதா செய்ய அவர் காண்பதை தவிர அவரால் வேறொன்றையும் செய்யமுடியாது என்று, பரிசுத்த யோவான் 5:19? அப்படி யானால், அவருடைய வார்த்தையின் படி, முதலாவது பிதா அதை செய்வதை தரிசனத்தில் பார்க்கும் வரை இயேசு ஒருபோதும் ஒரு அற்புதத்தை கூட செய்யவில்லை. அது உண்மை. பிலிப்பு அவரிடத்தில் வந்தபோது, அவன் போய் நாத்தான்வேலை கண்டு, அவனை மீண்டும் அழைத்து வந்து, அவர்கள் யாரை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று நாத்தான்வேலிடம் கூறினான், நாத்தான்வேலால் அதை விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் அவன் அந்த மேசியாவின் பிரசன்னத்திற்குள் வந்தபோது, இயேசு, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். அவன் ஒரு அரேபியனாக இருந்திருக்கலாம்; அவன் ஒரு கிரேக்கனாயிருந்திருக்கலாம்; அவன் வேறு யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்; அவர்கள் அனை வரும் ஒரே மாதிரியே உடை உடுத்துவார்கள். ஆனால் அவன் ஒரு யூதன் என்றும், நேர்மையான நீதிமான் என்றும் இயேசு அறிந்திருந்தார். மேலும் அந்த மனிதன் அவரிடம், “ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிவீர்?” என்றான். அவர், “பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழிருந்தபோது, நான் உன்னை கண்டேன்” என்றார். அது பதினைந்து மைல்கள் தூரத்தில், முந்தைய தினம் நடந்தது. அவர் இதை செய்தபோது, அவன், “ரபீ, நீர் தான் தேவனுடைய குமாரன்; நீர்தான் இஸ்ரவேலின் இராஜா” என்றான். 40. அவர் வெவ்வேறு நபர்களிடம் கூறினார்... கடந்து சென்ற நாட்களில் அவர் தன்னை அந்த வழியில்தான் அறிவித்தார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அவர் செய்த கிரியைகளை, அவருடைய சபையும் செய்யும் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை எத்தனை பேர் அறிவீர்கள்? "இன்னும் கொஞ்ச காலத்திலே, உலகமோ என்னை காணாது, ஆனால் நீங்களோ என்னை காண்பீர்கள், ஏனெனில் நான் (அது ஒரு தனிப்பட்ட பிரதிபெயர்[Personal pronoun])”, உலகின் முடிவு பரியந்தம் உங்களுடனேகூட, உங்களுக்குள் இருப்பேன். பிதா என்னை அனுப்பினதை போல நானும் உங்களை அனுப்புகிறேன்.” அவரை அனுப்பின பிதா, அவருடன் கூட சென்றார் மேலும் அவருக்குள் இருந்தார். சபையை அனுப்பும் இயேசுவும், அதோடுகூட செல்கிறார் மேலும் அதற்குள் இருக்கிறார். இங்கே பூமியில் இருந்த இயேசுவானவர் தான் இஸ்ரவேல் பிள்ளைகளை வனாந்தரத்தில் நடத்தி சென்ற அக்கினி ஸ்தம்பத்தில் இருந்த கர்த்தருடைய தூதன் (Angel of the Lord) என்று எத்தனை பேருக்கு தெரியும்? எல்லா வேத மாணாக்கர் களும் அதை அறிவார்கள். அவர் கூறினார்... அவர்கள், “உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமை கண்டேன் என்று சொல்லுகிறாயோ? நீ ஒரு பிசாசு என்பது இப்பொழுது எங்களுக்கு தெரிகிறது என்றார்கள். அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். மோசேயோடு அந்த புதரிலிருந்து பேசின அந்த அக்கினி ஸ்தம்பம் அதுதான். அவர் இங்கே இருந்தபோது, கிறிஸ்துவுக்குள் தேவன், இயேசு என்று அழைக்கப்பட்ட சரீரத்திற்குள் ஒன்றாக இணைக்கப் பட்டிருந்தார். பின்பு அவர் பூமியில் கிரியை செய்தபோது, அவர் செய்த கிரியைகளை செய்தபோது, அவர், “நான் தேவனிடத்தில் இருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்கே போகிறேன்" என்றார். அது உண்மைதானே? அப்படியானால், அவர் மாம்சமாவதற்கு முன்னர் அவர் என்னவாக இருந்தாரோ, அதற்கே அவர் மீண்டும் சென்றுவிட்டார். அது அவருடைய வார்த்தையின் படி இருக்கிறது. அவருடைய மரித்தல், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த் தெழுதல் மேலும் விண்ணேற்றத்திற்கு (acension) பிறகு, அதிகமாக கூச்சலிட்டு கொண்டும் சலசலப்பு செய்து கொண்டும் இருந்த சில ஜனங்களை கைது செய்யும்படி பவுல் மாறாக சவுல் தமஸ்குவுக்கு போகிற வழியிலே போய்க் கொண்டிருந்தான். அவன் தமஸ்குவுக்கு போவதற்கு சற்று முன்னர், அங்கே ஒரு மகத்தான ஒளி அவனுடைய முகத்தில் பிரகாசித்து அவனை குருடாக் கியது. மேலும் ஒரு சத்தம் வந்து, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" என்று கூறினது. அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அவர், “நான் இயேசு” என்றார். அது உண்மைதானே? அப்படியானால் அவர் மறுபடியுமாக மீண்டும் அக்கினி ஸ்தம்பமாகிவிட்டார், அது உண்மை தானே? தேவனிடத்தில் இருந்து வந்து, தேவனிடத்திற்கே சென்று விட்டார். இப்பொழுது, நான் கூறுவது போல நாம் அதை இந்த புகைப்படத்தில் பார்த்தால்... என்னை மறைத்துவிடுங்கள், அது நானல்ல, அது அவர். அவர்கள் அதை பற்றி உங்களிடம் கூறியிருக்கிறார்கள். முழு உலக வரலாற்றிலேயும் புகைப்படம் எடுத்ததிலேயே இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று என்று அது வாஷிங்டன் டிசியில் இருக்கிறது. 41. இப்பொழுது, இயேசு, "நானே திராட்சச் செடி; நீங்கள் கொடிகள்” என்றார். இப்பொழுது, செடியானது கனியை கொடுக்காது; கொடிகள்தான் கனியை கொடுக்கும். கொடியானது நிச்சயமாக செடியின் கனியை கொடுக்கும். அது உண்மைதானே? ஒட்டுப்போடப்பட்டிருந்தாலும் அல்லது அது என்னவாக இருந்தாலும், அது அந்த செடியின் ஜீவனை கொண்டு வந்தே ஆகவேண்டும் ஏனெனில் அது அந்த செடியினால் தான் பிழைக்கிறது. இயேசு, “நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்றார். சரி அப்பொழுது, “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு அளிக்கப் படும்" என்றார். பின்பு கவனியுங்கள்... ஒரு பீச் மரம் பீச் கனிகளை கொடுக்குமா? ஒரு திராட்சச் செடி திராட்சை பழங்களை கொடுக்கும். ஒரு தர்பூசணி தர்பூசணியை கொடுக்கும். கிறிஸ்துவின் ஆவி கிறிஸ்துவின் ஜீவியத்தை கொடுக்கும். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் என்று வேதவாக்கியம் கூறுகிறதா? நாம் இப்பொழுது கூறிய வண்ணமாக, யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் முன்பாக, அவர் இந்த விதத்தில் தன்னை அறிவித்திருந்தால் மேலும் அது புறஜாதிகளிடம் செய்யப் படுவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தால்... இரண்டாயிரம் வருடங்களாக புறஜாதி சபையின் தேவனை பற்றிய பாடம் (theology), நாம் எங்கே வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா. ஆனால் அவர்களுக்கு தன்னை அவர் அறிவித்தது போலவே புறஜாதிகளுக்கும் அறிவிக்க அவர் கடமைப் பட்டிருக்கிறார் அல்லவா? நான் கடந்த இரவு கூறியது போல, தேவன் புத்திசாலித்தனத்தில் வளருவதில்லை; அவருடைய முதல் தீர்மானமே பரிபூரணமாக என்றென்றைக்கும் இருக்கிறது. ஒன்று வரும்போது – ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது தேவன் கிரியை செய்கிறார், அந்த அதே குறிப்பிட்ட நேரம் மீண்டும் வரும்போது, தேவன் முதல் தடவை எப்படி கிரியை செய்தாரோ அதே விதத்தில் கிரியை செய்ய வேண்டும் அல்லது முதல் தடவை அவர் தவறாய் கிரியை செய்திருக்கிறார். அவரால் வேறுபட முடியாது, அவர் மாறாமல் இருக்க வேண்டும். 42. ஆகவே, இப்பொழுது உங்களுக்கு நான் இன்னொரு வேதவாக்கியத்தை தருகிறேன்; ஏதோவொன்று என் இருதயத்தில் வருகிறது, கடந்த மாலை நாம் இங்கே ஜெப அட்டைகளை, எண்கள் கொண்ட அட்டைகளை வைத்து இருந்த ஜனங்களை அழைத்தோம். அவர்கள் மேடைக்கு வந்தார்கள், தேவனாகிய கர்த்தர் ஆரம்பத்தில் அவர் செய்தது போலவே, வெளிப்படுத்தவும், ஜனங்களை சுகமாக்கவும் இங்கே இருந்தார். அதை பார்க்க இங்கே இருந்த யாவரும், அது உண்மை என்று அறிந்தவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இன்றிரவு நான் உங்களுக்கு இன்னொரு வேத வாக்கியத்தை தரப்போகி றேன் மேலும் நாம் - வேறு, கர்த்தருக்கு சித்தமானால். இப்பொழுது, வேதாகமத்தில் ஒரு சிறிய பெலவீனமான பெண் இருந்தாள், அவர்தான் தேவனுடைய குமாரன் என்று அவரை பார்காமலேயே அவள் நினைவில் வைத்து விசுவாசித்தாள். ஆகவே, உங்களுக்கு புரிகிறதா, தேவனி டமான உங்களுடைய அணுகுமுறை தான் பலனைக் கொண்டுவருகிறது. நான் கூறியதை போன்று, ஒரு ரோமன் அவருடைய தலையை ஒரு - ஒரு கந்தை துணியால் சுற்றி, ஒரு கோலினால் அவருடைய தலையில் அடித்து, தீர்க்கதரிசனம் உரை அல்லது உன்னை அடித்தது யார் என்று எங்களிடம் கூறு, நாங்கள் உன்னை விசுவாசிப்போம்” என்றான். அவர் எந்த வல்லமையையும் உணரவில்லை. ஆனால் கூட்டத்தினூடாக உந்தி சென்று அவருடைய வஸ்திரத்தை தொட்ட ஒரு சிறிய பெண் இருந்தாள், அவள் கூறியது என்னவென்றால், “என்னால் அவருடைய வஸ்திரத்தை தொடமுடிந்தால், நான் சுகமாகி விடுவேன்.” பல வருடங்களாக உதிர போக்கினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பெண், எதாலும் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை... அவரை அவள் தொட்டபோது, அவள் ஜனக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டாள். அவள் உட்கார்ந்து கொண்டாளா அல்லது நின்றிருந்தாளா என்பதை நான் அறியேன். ஆனால் எப்படியோ, அவள் அந்த ஜனக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டாள். இயேசு நின்று, “என்னை தொட்டது யார் ?” என்றார். அது வேதவாக்கியம் என்று எத்தனை பேருக்கு தெரியும்? “என்னை தொட்டது யார்?” பேதுரு அவரை கடிந்துகொண்டான். அவன், “ஏன், ஒவ்வொருவரும் உம்மை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான், வேறு வார்த்தைகளில் கூறினால், அவரை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், “எப்படி இருக்கிறீர்கள்,” “ரபீ, உங்களை காண்பதில் மகிழ்ச்சி. நீர் எழுப்புதல் கூட்டத்திற்காக வந்திருக்கிறீரா? ' பேதுரு, "ஒவ்வொருவரும் உம்மை தொடுகிறார்கள். நீர் ஏன் அவ்வாறான காரியங்களை சொல்லுகிறீர்?” என்றான். இயேசு, “ஆனால் நான் பெலவீனமானேன்; என்னிடம் இருந்து வல்லமை புறப்பட்டது” என்றார். அந்த சிறிய பெண்ணை கண்டுபிடிக்கும் வரை அவர் சுற்றியும் பார்த்தார், அவளுடைய பிரச்சனை என்னவென்பதை அவளிடம் அவர் கூறினார் — அதாவது அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்றார். அது உண்மைதானே? 43. புதிய ஏற்பாட்டில், எபிரேயர் நிரூபத்தின் படி, நம்முடைய பெலவீனங்களின் உணர்வுகளால் தொடக் கூடிய பிரதான ஆசாரியனாக இயேசு கிறிஸ்து இப்பொழுது இருக்கிறார், என்பதை இன்றிரவு எத்தனை பேர் அறிவீர்கள்? சரி, அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருந்தால், நீங்கள் - தொடக்கூடிய பிரதான ஆசாரியனாக அவர் இருக்கும் பட்சத்தில், அவர் நேற்றைய தினத்தில் கிரியை செய்தது போலவே அவர்கிரியை செய்ய வேண்டும்தானே? எத்தனை பேர் அதை விசுவாசிக் கிறீர்கள்? நேற்று இருந்தது போலவே... இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த பெண் செய்தது போல உங்களுடைய விசுவாசத்தினால் அவரை தொடுவதே, அவரை தொடுவதே, உங்களுடைய கரங்களால் அல்ல. அவர் உணர்ந்தது அவளுடைய அவளுடைய கரங்களை அல்ல; அவர் உணர்ந்தது அவளுடைய விசுவாசத்தைதான். அவர் முழுவதுமாக திரும்பினார். இன்றிரவு அவர் மாறாமல் இருந்தால், இங்கே அதே மாறாத அக்கினி ஸ்தம்பமாக, இது அவராக இருக்குமாயின், அவருடைய புகைப்படம், அது அவராக இருந்தால், அது அவரை பற்றி சாட்சி கொடுக்கும். அது அவரல்ல என்றால், அது கொடுக்காது. ஏனெனில் தேவன் தன்னுடைய சொந்த வரங்களுக்கு சாட்சி கொடுக்கிறார்; எபிரேயர் 11:1 அப்படிதான் கூறுகிறது. இப்பொழுது, மேலும் அவர் பிரதான ஆசாரியனாக இருந்தால், இங்கே மேடைக்கு நாம் யாரையும் அழைக்க மாட்டோம், அங்கே ஜனக்கூட்டத்திலும் பால்கனியிலும் இருக்கும் நீங்கள், நீங்கள் எங்கேயிருந்தாலும், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் தேவனை விசுவாசித்தால், ஒரு துளி கூட உங்களுடைய இருதயத்தில் சந்தேகிக்காதீர்கள், ஆனால் அவரை தொடுங்கள், அன்று அவர் கிரியை செய்தது போலவே இன்றிரவும் செய்வார் இல்லையென் றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரல்ல. நண்பர்களே, உங்களுக்கு புரிகிறதா, அது நீண்ட காலமாகிவிட்டது வெறும் தேவனை பற்றிய பாடமும், சபைகளை கட்டுவதும், ஸ்தாபனங்களை கொண்டிருப் பதும், ஜனங்களை முன்பாக சாய்த்து, பின்பாக சாய்த்து, மேலே, கீழே, மூன்று முறை என ஞானஸ்நானம் கொடுப்பது, இன்னும் என்ன என்ன... அதற்கு எந்த அர்த்தமுமே இல்லை. நம்முடைய தேவபாடம் (thelogoy) கிறிஸ்துவை பிறப்பிக்கவில்லையென்றால் அதினால் என்ன நன்மை இருக்கிறது? அவர் ஜீவிக்கிறார். அவர் இன்றிரவு அவ்வாறான ஒரு காரியத்தை செய்தால், எத்தனை பேர் அவரை நேசிப்பீர்கள், மேலும் அவரை விசுவாசிப்பீர்கள் மேலும் அவரை ஏற்றுக்கொள்வீர்கள்? அவருக்கென்று உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அவர் ஒவ்வொரு நபரையும் அறிவார். என்னால் உங்க ளுடைய எல்லா கரங்களையும் பார்க்க முடியவில்லை, நிச்சயமாக, உங்களுடையதை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 44. இப்பொழுது, எனக்கு முன்பாக இருக்கும் ஒவ்வொரு நபரும் அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன்... எனக்கு உங்களை தெரியாது என்று எத்தனை பேர் அறிவீர்கள், எனக்கு உங்களை தெரியாது என்றால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் யாரென்றால்... எனக்கு... இங்கே நிற்கும் இந்த சகோதரன், என்னால் அழைக்கமுடியவில்லை... வைட்க்லௌட் (Whitecloud), இல்லை மெக்லவுட் (McCloud) இல்லை அதுபோன்ற எதோவொன்றுதான் அவருடைய பெயர். எங்களிடம் ஜெபர்சன்வில்லில் ஒரு வைட்கலௌட் இருக்கிறார். அது தவறான ஒன்று என்று நான் நினைக்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் மெக்லவுட், டாக்டர் வெயில், சகோதரன் ஸ்வீட், அவ்வளவுதான். ஆனால் தேவனாகிய கர்த்தர் உங்கள் அனைவரையும் அறிவார். மேலும் இப்பொழுது, தேவன் சாலொமோன் என்கிற மனிதனுக்குள் வைத்த ஒரு வரத்தை பார்க்க வந்த பெண்ணை பற்றி இன்றிரவு என்னுடைய செய்தியில் கூறுவதால் என்ன நன்மை இருக்கிறது, அவள் அந்த சந்ததியாரை குற்றஞ்சுமத்துவாள் ஏனெனில் இயேசு அங்கே இருந்தார், மேலும் அவருடைய வேதவாக்கியத்தின் படி மாறாமல் இருக்கிறார் என்று உரிமை கோருகிறார், இன்றிரவு வந்து அவர் அதே காரியத்தை செய்யவில்லையென்றால், அவளை எப்படி குற்றஞ்சுமத்த முடியும். ஆனால் அவர் அதை செய்து, அதன்பின் நீங்கள் அவரை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் குற்றஞ்சுமத்தப் படுவீர்கள், ஏனெனில் இப்பொழுது அவரை குறித்து நான் பேசிக்கொண்டிருக்கும் அதே காரியத்தை அந்த சந்ததியார் செய்ததால் தான் அவர்களை அவர் குற்றஞ்சாட்டினார். 45. இப்பொழுது, நீங்கள் அனைவரும் ஜெபிக்க வேண்டு மென, மேலும் தேவன் இங்கே இருக்கிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழு பெலத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்பொழுது, தயவுசெய்து, இப்பொழுது சுற்றிலும் நகராதீர்கள். மிகவும் பயபக்தியாய் இருங்கள். உங்களை மேடைக்கு அழைத்து வருவதை காட்டிலும் இது மிகவும் அப்பாற்பட்டது. இங்கே இருக்கும் எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லை, நாம் பார்க்கலாம், நீங்கள் வியாதியாயிருக்கிறீர்கள்... நான் பார்க்க விரும்புகிறேன்... அதை கூறுவதற்கு வழியே இல்லை. ஜெப அட்டைகளுடன் அல்லது ஜெப அட்டைகள் இல்லாமல் என்று என்னால் கூற முடியாது. நீங்கள் எளிமையாக, நீங்கள் எளிமையாக தேவனை விசுவாசியுங்கள், தேவன் நிச்சயமாக ஜெபத்திற்கு பதில் தருவார். இயேசு, “உங்களால் விசுவாசிக்க கூடுமானால்... என்றார்", ஒவ்வொருவரும் பயபக்தியாய் தொடுங்கள், "தேவனாகிய கர்த்தாவே...” என்று கூறுங்கள், இதை உங்களுடைய ஜெபத்தில் கூறுங்கள், “தேவனாகிய கர்த்தாவே, என்னை அனுமதியும், ஓ கர்த்தாவே, எனக்கு தேவையிருக்கிறது. நான் உம்மை நேசிக்கிறேன். இந்த மனிதன் கூறுவது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன் ஏனெனில் அது வேதாகமத்தில் இருந்து வருகிறது. ' பழைய ஏற்பாட்டில் ஊரீம் தும்மீம் மீது பளிச்சிடும் போது, அது உண்மையாயிருந்தது. அந்த நாளுக்கான ஊரீம் தும்மீம், ஆரோனின் மார்பதக்கம், அது இல்லாமல் போய்விட்டது, ஆனால் தேவன் தன்னுடைய வார்த்தை என்கிற இன்னொரு ஊரீம் தும்மீமை வைத்திருக்கிறார். அவருடைய வார்த்தையிலிருந்து அது உங்களுக்கு பளிச்சிட்டால், அப்பொழுது அது உண்மையாயிருக்கிறது. உங்களால் விசுவாசிக்க கூடுமானால்... அப்படியே பய பக்தியாய் இருங்கள், விசுவாசத்தினால் கிட்டி சேர்ந்து, கூறுங்கள், “தேவனாகிய கர்த்தாவே, பிரதான ஆசாரியனே, நான் வியாதியோடும் தேவையோடும் இருக்கிறேன். கர்த்தாவே என்னை தொடும், இதற்குமேல் நான் சந்தேகப்படவே மாட்டேன். அது என்னுடைய எல்லா பயத்தையும் எடுத்துப்போட்டு எனக்கு உதவி செய்யும்." பாருங்கள், அது - அது அபிஷேகமாயிருக்கிறது. நானும் காத்திருக்கிறேன், நீங்களும் காத்திருக்கிறீர்கள். ஏதோவொன்று சம்பவிக்க வேண்டும் இல்லையென்றால் வார்த்தை தவறாயிருக்கிறது அல்லது நான் தவறாயிருக்கிறேன். வேதாகமம் அப்படிதான் கூறியிருக்கிறது, எனவே அது வார்த்தையை கூட தவறாக்கிவிடும். அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். 46. நான் கவனிக்கும்படி முயற்சி செய்கிறேன். அது கர்த்தருடைய தூதனானவர், அந்த ஒளி, அதைதான் நான் கவனிப்பேன். அது ஒரு நபரிடம் வரும். அங்கே நான் கவனிக்கையில் ஒரு தரிசனம் வரும். கடந்து சென்ற நாட்களில் ஜீவித்த அதே தேவன் தான் இன்றைக்கும் இருக்கிற மாறாத தேவனாயிருக்கிறார். நாம் ஆராதனையில் இருக்கலாம். நின்று - நான் இங்கே நின்றிருப்பதை கிறிஸ்தவர்கள் பாராட்டுவார்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியும். தயவு செய்து இப்பொழுது, அதிக பயபக்தியோடு, பயபக்தியாயிருங்கள். மிகவும் அமைதியாய் இருங்கள்; சுற்றியும் நகராதீர்கள்; நீங்கள் குறுக்கிட்டுவிடுவீர்கள். அது தொந்தரவுபடுத்தும். நிச்சயமாக பரலோகத்தின் தேவன் மேற்கொள்வார். நம்முடைய அன்பையும் நம்முடைய ஆராதனையையும் அவர் அறிந்திருக்கிறார். கர்த்தாவே, தேவனே, நான் வார்த்தையை பிரசங்கித்தேன். அந்த வார்த்தைக்கு நான் பொறுப்பாளியல்ல; நீர் என்ன சொன்னீரோ அதை கூறுவதற்கு மாத்திரமே நான் பொறுப்பாளியாயிருக்கிறேன். நீர் பூமியிலிருந்தபோது செய்ததை செய்ய வேண்டுமென்று நான் கேட்கிறேன், அதாவது இந்த ஜனங்கள், இன்றிரவு உம்மை விசுவாசிக் கும் அநேக நல்ல கிறிஸ்தவர்கள் இங்கிருக்கிறார்கள், கர்த்தாவே, அதை எங்களுக்கு நீர் ஒருமுறை செய்தால். நீர் ஜீவிக்கிறீர் என்பதை ஜனங்கள் உண்மையான அடையாளத்தின் மூலமாக அறிந்து கொள்ளும்படி அனுமதியும். சில இருதயத்துடன் பேசும், கர்த்தாவே, இங்கு எங்கேயாவது விசுவாசத்தை கண்டறியும். 47. பயபக்தியாய், இதோ அது இருக்கிறது. என்னுடைய இடது பக்கமாக கர்த்தருடைய தூதனானவர் ஒரு சீமாட்டியின் மேலே தொங்கிக் கொண்டிருக்கிறார். அவள் தன்னுடைய பாதங்களிலும் கால்களிலும் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுகிறாள். அது உண்மை. அந்த... திருமதி. டில்டன், என்பது உங்களுடைய பெயர், ஆம் தானே? உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். எனக்கு உங்களை தெரியாது, எனக்கு தெரியுமா? உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதே இல்லை. நீங்கள் சுகமாகி விட்டீர்கள். உங்களுடைய பெலவீனங்களின் உணர்வுகளால் தொட முடிந்த அந்த பிரதான ஆசாரியனை நீங்கள் தொட்டுவிட்டீர்கள். ஓ, நாம் எப்படியாய் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். இப்பொழுது, மிகவும் பயபக்தியாய் இருங்கள். எதற்காகவோ அந்த ஒளி இன்னமுமாக அந்த பெண்ணின் மீதே தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் அங்கே அமர்ந்து, “கர்த்தாவே, அது நானாக இருக்கட்டும்” என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது உண்மையென்றால், சீமாட்டியே உங்களுடைய கையை முன்னும் பின்னும் அசையுங்கள், அப்படி செய்யும்போது அவர்களால் உங்களை பார்க்க முடியும். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அது என் வேதாகமம் என்பதை பரலோகத்தில் இருக்கும் தேவன் அறிவார், அந்த பெண்ணை என்னுடைய ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. அவருக்கு எப்படி அவளை தெரியும், அவளுடைய பிரச்சனை என்ன வென்பதும், அவள் அவள் யார் என்பதும்? இது அவர் வேதாகமத்தில் செய்த அதே செயல்தான், அப்படியில்லை என்றால் நான் வேதாகமத்தை அறியவில்லை. அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், “ஆமென்” என்று கூறுங்கள். நல்லது, பயபக்தியாய் இருங்கள். கர்த்தருக்கு சித்தமானால் நீங்கள் இன்னும் அதிகம் காண்பீர்கள். இப்பொழுது, பால்கனிகளில் தொடர்ந்து ஜெபத்தில் இருங்கள். சுற்றியிருக்கும் எல்லாவிடங்களிலும், நீங்கள் எங்கே இருந்தாலும் பொருட்டல்ல, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள். 48. எதற்காகவோ அந்த ஒளி இன்னமும் கூட அந்த பெண்ணின் மீதே தொங்கிக்கொண்டிருக்கிறது, ஆனால் அது வேறு ஏதோவொன்று தவறாயிருக்கிறது. இல்லை, அது தவறாயில்லை. அது அவளுக்கு பக்கத்திலிருக்கும் பெண், அந்த பெண்ணிற்கு மார்பகத்தில் ஒரு - ஒரு கட்டியிருக்கிறது. அது சரிதானே, சீமாட்டி. ஒரு நிமிடம் காலூன்றி எழுந்து நில்லுங்கள் ஆதலால் உங்களுடைய ஆவியை என்னால் பிடிக்க முடியும். அந்த கட்டி உங்களுடைய இடது மார்பகத்தில் இருக்கிறது. அது உண்மை. நீங்கள் திருமதி. வுட்வார்ட். வீட்டிற்கு திரும்பி சென்று சுகமடையுங்கள். அந்த புற்றுநோயை குறித்து பயப்படாதீர்கள், இயேசு கிறிஸ்து வியாதியஸ்தர்களையும் வேதனை படுகிறவர்களையும் சுகமாக்குகிறார். உங்களால் விசுவாசிக்க கூடுமானால்... அது அங்கே இருக்கும் ஒரு சிறிய சீமாட்டியிடம் செல்கிறது, கொஞ்சம் வயதானவள், அவளுடைய தொப்பியில் ஒரு சிறு கோடு சுற்றிலுமிருக்கிறது, அங்கிருந்து சரியாக இரண்டு வரிசைக்கு பின்னால் அமர்ந்திருக்கிறாள். இந்த நேரத்தில் அது அவளிடம் கீழே இறங்கி செல்கிறது. பித்தப்பை பிரச்சனையால் அவள் அவதிப்படுகிறாள். அந்த வரிசையின் கடைசியில் இருக்கும் சீமாட்டியே, கர்த்தர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கி றீர்களா? உங்களுக்கு இருதய கோளாரும் கூட இருக்கிறது, அங்கே அமர்ந்திருக்கிற... ஆம், அம்மையாரே. அவர் உங்களை சுகப்படுத்துகிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், நீங்கள் என்னை புரிந்து கொள்ளாததற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், பித்தப்பை கோளாறாலும், இருதய கோளாறாலும் அவதிப் படுகிறீர்கள். அது உண்மை. அது உண்மையென்றால் உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது இரட்டை காரியங்களாக இருந்தது: உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் சீமாட்டிக்கும் பித்தப்பை கோளாறு இருக்கிறது, உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள். சீமாட்டியே, உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள், ஏனெனில் அது உங்கள் இருவரையும் விட்டு சென்று விட்டது (ஆமென்); அது ஒளியாக மாறிவிட்டது. அவர்கள் எதை தொட்டார்கள்? அவர்கள் பிரதான ஆசாரியனை தொட்டார்கள். ஆனால் அவர்கள் என்னிடமிருந்து இருபது கெஜம் தூரத்தில் இருக்கிறார்கள். அது நானல்ல; அது கிறிஸ்துவாயிருக்கிறது. தன்னைப்பற்றி அவரே சாட்சி கொடுக்கிறார், அவர்தான் அந்த பிரதான ஆசாரியன். அவர் இன்னமும் இன்றிரவும் ஜீவிக்கிறார். 49. ஐயா, அங்கே அமர்ந்துகொண்டு, நீங்கள் கர்த்தரை துதிக்கிறீர்கள். உங்களுக்கு சர்க்கரை வியாதியிருக்கிறது. எனக்கு உங்களை தெரியாது, எனக்கு தெரியுமா? ஒரு நிமிடம் நீங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். அப்படியே அங்கேயே இருங்கள். உங்களுடைய... தில் ஏதோவொன்று தவறாயிருக்கிறது, ஆம், சர்க்கரை வியாதி, உங்களுடைய இரத்தத்தில் ஏதோவொன்று தவறாயிருக்கிறது. என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று அல்லது அவருடைய ஊழியக்காரனென்று, உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். ஐயா, என்னால் உங்களை சுகமாக்க முடியாது. உங்களை சுகமாக்கும்படி என்னிடம் எந்த வழியுமே இல்லை,... கொண்டுவந்த ஏதோவொன்றை நீங்கள் தொட்டீர்கள். ஏதோவொன்று சம்பவித்து கொண்டி ருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். நிச்சயமாக நீங்கள் இந்த நகரத்தை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் இந்த நகரத்தை சேர்ந்தவர் அல்ல. மைனே, பிட்ஸ்பீல்ட் (Pittsfield, Maine) என்கிற இடத்தில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். அது உண்மை. உங்களுடைய பெயர் திரு. சிலாஸ் பெர்கின்ஸ். அது நிச்சயமாக உண்மை. கர்த்தர் உரைக்கிறதாவது. அது உண்மை. நீங்கள் விசுவாசிக்கிறீர் களா? அப்படியானால் வீட்டிற்கு சென்று சுகமாகுங்கள். உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொண்டு, வீட்டிற்கு சென்று சுகமடையுங்கள். அங்கே ஒரு சிறிய சீமாட்டி தன்னுடைய கருப்பு நிற ஆடையின் மீது ஒரு சிறிய ஏதோவொன்றுடன் இருக் கிறாள்... அவள் சீழ்புண்களினால் (ulcers) அவதிப் படுகிறாள். என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அவருடைய ஊழியக்காரனென்று? உங்களுக்கு வீங்கிய பருத்த நரம்புகளும் (varicose veins) இருக்கின்றன. அது உண்மையென்றால் உங்களுடைய கையை உயர்த்துங்கள். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சுகமாகுங்கள். இயேசு கிறிஸ்து... நீங்கள்... அவரை தொடுவதற்கு போதுமான விசுவாசத்தை நான் பெற்றிருக்கிறேன், நிச்சயமாக இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான விசுவாசமும் உங்களுக்கு இருக்கிறது. உங்களால் விசுவாசிக்க கூடுமானால் ... 50. அங்கே அமர்ந்து, அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும், அந்த கருப்பு (black) முதுகு (back) வலியுடன் இருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஐயா, அதிலிருந்து தேவன் உங்களுக்கு சுகம் தருவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எழுந்து நின்று அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே உங்களுக்கு முன்பாக தன்னுடைய கையை இப்படி வைத்து அமர்ந்திருக்கும் சீமாட்டி ஒருவள், நெஞ்சு வலியால் அவதிப்படுகிறாள். அது உண்மை. உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவளும் நீங்களும் உங்களுடைய கணவனுக்காக ஜெபித்துகொண்டிருக்கிறீர்கள். அவர் குடிக்கிறார் எனவே உங்களுக்கு...?...அது உண்மை. ஓ, அது கர்த்தர் உரைக்கிறதாவது...?...சரி. ஐயா, இப்பொழுது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த காரியம் சென்றுவிடும். அதை செய்ய உங்களுக்கு விருப்பமில்லை; நீங்கள் அதை செய்யாதபடிக்கு மிகவும் ஒழுக்கநெறி கொண்ட மனிதன் (gentleman). அவரை விசுவாசியுங்கள். உங்களில் எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கடைசி நாட்களில் ஷீபாவின் ராணி எழுந்து நின்று அவர் செய்த செயல்களை கண்ட அந்த சந்ததியாரை குற்றஞ்சுமத்துவாள் என்று அன்றைக்கு நின்று கூறிய கிறிஸ்து, புறஜாதி யுகத்தின் முடிவில் அவர் இங்கிருந்து அதே செயல்களை செய்து கொண்டிருக்கிறார். 51. இப்பொழுது, எந்த மனுஷனாலும் உங்களை சுகப் படுத்த முடியாது. தேவன் ஏற்கனவே சுகமாக்கிவிட்டார். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். யாரேனும் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்ன வென்றால், அவர் ஏற்கனவே செய்துமுடித்த ஒன்றை உங்களை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வைப்பதுதான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "இந்த அடையாளங்கள் விசுவாசிகளை பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்தால், அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று வேதவாக்கியம் அழுத்தமாக கூறுகிறது. அது உண்மைதானே? சரி, நம்மிடம் எத்தனை விசுவாசிகள் இருக்கிறார்கள், உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். அப்படியானால் உங்களுடைய கைகளை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நீங்கள் விசுவாசிகள் என்றால் அதை நாம் தேவனுக்கு நிரூபிப்போம் நீங்கள் ஒரு விசுவாசி என்று. மேலே பால்கனிகளில்... ஐயா, உங்களுக்கு, ஆண் சுரப்பியில் கோளாறு இருக்கிறது, சரியாக அந்த கம்பத்தின் அருகில் அமர்ந்திருக்கிறீர். அது எல்லாம் இப்பொழுது முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். அது குணமாகிவிட்டது. அங்கே காச நோயுடன் இருக்கும் அந்த இளம் சீமாட்டியே, அது முடிந்துவிட்டது. ஓ, அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா. நீங்கள் ஜீவிக்கிற தேவனின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள், ஒரு மனிதனுடய பிரசன்னத்தில் அல்ல, ஆனால் ஒரு உண்மையான தேவனுடைய பிரசன்னத்தில் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாத்திரம் ஜீவிக்கவில்லை, ஆனால் இங்கே இப்பொழுது இந்த பிரசன்னத்தில் ஜீவிக்கிறார். 52. ஒ தேவனாகிய கர்த்தாவே, ஒருவர் மீது ஒருவர்அவர்கள் கைகளை வைத்திருப்பதை நீர் காண்கிறீர். நீர் அவர்களுக்கு விசுவாசத்தை கொடுக்கும்படி நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இன்னும் அதிகமாக நீர் என்ன செய்ய முடியும்? நீர் இங்கே இருக்கிறீர் என்று நீர் அறிவித்திருக்கிறீர், இப்பொழுது அந்த ஒரு மகத்தான, தன்னிலேதானே இயங்குகிற பரிசுத்த ஆவியின் வல்லமை இந்த ஜனங்களினூடாக பாய்ந்து சென்று தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகமாக்க வேண்டுமென நான் கேட்கிறேன். சாத்தானே, நீ அவர்களை நீண்ட காலமாக சிறைபிடித்து வைத்திருந்தாய், ஆனால் இன்றிரவு உன்னுடைய முகத்திரை கிழிக்கப்பட்டது. ஒரு சபைக்காக இயேசு சீக்கிரம் வருகிறார், மேலும் அவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலின் விசுவாசத்தை கொடுக்க அவர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவர்களை கட்டி வைத்திருக்கும் பிசாசின் ஆவியே, இந்த ஜனக்கூட்டத்தில் இருந்து வெளியே வா. ஜீவிக்கிற தேவன் மூலமாக, நீ வெளியே வா என்று உனக்கு நான் கட்டளையிடுகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும், எவ்வளவாக கைகால் பின்னியிருந்தாலும், நீங்கள் எப்படி இருந்தாலும், இயேசு கிறிஸ்து இங்கிருக்கிறார் என்றும் அவர் பிரசன்னமாய் இருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசித்தால், உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். நீங்கள் யாராயிருந்தாலும் எனக்கு கவலை இல்லை, எழுந்து நில்லுங்கள். உங்களு டைய பின்னியிருக்கும் கைகளை காற்றிலே அசையுங்கள். இப்பொழுது, அது எல்லாம் முடிந்துவிட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நீங்கள் குணமானீர்கள்... ?...